Delhi Capitals vs Lucknow Super Giants Dream11 Prediction, IPL 2025: ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் நேற்று கோலாகலமாக தொடங்கியது.  மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த 4 அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

Advertisement

இந்நிலையில் நாளை நடைபெறவுள்ள 4ஆவது லீக் போட்டியில் ரிஷ்ப் பந்த் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், அக்ஸர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டி விசாகப்பட்டினத்தில் உள்ள விடிசிஏ கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இரு அணிகளிலும் நட்சத்திர பட்டாளங்கள் உள்ளதால் இதில் எந்த அணி வெற்றியைப் பதிவுசெய்து தொடரை வெற்றியுடன் தொடங்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

DC vs LSG: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள்- டெல்லி கேப்பிட்டல்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்
  • இடம் -   விடிசிஏ கிரிக்கெட் மைதானம், ஹைதராபாத்
  • நேரம் - மார்ச் 24, இரவு 7.30 மணி (இந்திய நேரப்படி)

DC vs LSG Pitch Report

ஐபிஎல் 2025 தொடரின் நான்காவது லீக் போட்டி விசாகப்பட்டினத்தில் உள்ள டாக்டர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி ஏசிஏ-விடிசிஏ கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இங்கு இதுவரை 10 சர்வதேச டி20 போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், அதில் 7 முறை சேஸிங் செய்த அணிகள் வெற்றியைப் பதிவுசெய்துள்ளது. மேலும் இங்கு சர்வதேச டி20 போட்டியில் முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர் 128 ரன்களாக உள்ளது. முன்னதாக கடந்த ஐபிஎல் தொடரில் இரண்டு போட்டிகள் இங்கு நடைபெற்ற நிலையில், இரண்டு போட்டியில் சேஸிங் செய்த அணிகளே வெற்றியைப் பதிவுசெய்தது குறிப்பிடத்தக்கது. 

DC vs LSG: Where to Watch?

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி இந்தியாவில் நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் ஜியோ ஹாட்ஸ்டாரிலும் நேரலையில் கணலாம்.

DC vs LSG Head To Head Record

  • மோதிய போட்டிகள் - 05
  • லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – 03
  • டெல்லி கேப்பிட்டல்ஸ் - 02

DC vs LSG Dream11 Team

  • விக்கெட் கீப்பர்கள் - கே.எல். ராகுல், நிக்கோலஸ் பூரன் (துணை கேப்டன்), ரிஷப் பந்த், அபிஷேக் போரெல்
  • பேட்ஸ்மேன்கள் - டேவிட் மில்லர், ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க், டிரிஸ்டன் ஸ்டப்ஸ்
  • ஆல்-ரவுண்டர் - அக்சர் படேல்
  • பந்து வீச்சாளர்கள் - மிட்செல் ஸ்டார்க், குல்தீப் யாதவ்.

Delhi Capitals vs Lucknow Super Giants Probable Playing XI

Delhi Capitals Probable Playing XI : ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க், ஃபாஃப் டு பிளெசிஸ், கேஎல் ராகுல், அபிஷேக் போரெல், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அக்சர் படேல் (கேப்டன்), அசுதோஷ் சர்மா, குல்தீப் யாதவ், மிட்செல் ஸ்டார்க், முகேஷ் குமார், தங்கராசு நடராஜன்.

இம்பேக்ட் வீரர்- மோஹித் சர்மா.

Lucknow Super Giants  Probable Playing XI: மிட்செல் மார்ஷ், அர்ஷின் குல்கர்னி, நிக்கோலஸ் பூரன், ரிஷப் பந்த் (கேப்டன்), டேவிட் மில்லர், ஆயுஷ் படோனி, ஷாபாஸ் அகமது, ஷர்துல் தாக்கூர், ரவி பிஷ்னோய், ஷமர் ஜோசப், மணிமாறன் சித்தார்த்.

இம்பேக்ட் வீரர் - ஆகாஷ் சிங்/ராஜ்வர்தன் ஹங்கர்கேகர்.

DC vs LSG Dream11 Prediction, DC vs LSG, DC vs LSG Dream11 Team, Fantasy Cricket Tips, IPL 2025, DC vs LSG Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Delhi Capitals vs Lucknow Super Giants

Disclaimer: இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News