ஐபிஎல் 2024: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

Updated: Fri, Apr 26 2024 14:54 IST
ஐபிஎல் 2024: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்! (Image Source: Google)

விறுவிறுப்பாக நடபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனில் எந்த நான்கு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இத்தொடரில் நாளை நடைபெறவுள்ள 43ஆவது லீக் போட்டியில் ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்த்து ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இந்தாண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தொடக்கத்தில் தோல்விகளைச் சந்தித்தாலும், தற்போது அடுத்தடுத்து வெற்றிகளை பதிவுசெய்து புள்ளிப்பட்டியலின் 6ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. மறுபக்கம் மும்பை இந்தியன்ஸ் அணியும் அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்து புள்ளிப்பட்டியலின் 8ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முன்னேறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - டெல்லி கேப்பிட்டல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்
  • இடம் - அருண் ஜெட்லி மைதானம், டெல்லி
  • நேரம் - மதியம் 3.30 மணி

பிட்ச் ரிப்போர்ட்

இந்தப் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த சீசனில் இங்கு நடைபெற்ற முதல் போட்டியிலேயே இமலய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. மேலும் இங்குள்ள பவுண்டரி எல்லைகள் சிறியது என்பதால் பேட்டர்கள் தங்கள் ஷாட்டுகளை தேர்வு செய்து விளையாட ஏதுவாக இருக்கும். மேலும் இங்கு இரவு நேரத்தில் பனியின் தாக்கம் இருந்தாலும் அது பெரிதளவில் பந்துவீச்சாளர்களுக்கு கை கொடுக்காது என்பதால், டாஸ் வெல்லும் கேப்டன் பேட்டிங்கைத் தேர்வு செய்வது வெற்றிக்கு வழி வகுக்கலாம். 

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 34
  • டெல்லி கேப்பிட்டல்ஸ் - 15
  • மும்பை இந்தியன்ஸ் - 19

நேரலை

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஐபிஎல் தொடரின் இந்த சீசனின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் கண்டு ரசிக்கலாம். அதேசமயம் இத்தொடரின் ஓடிடி உரிமத்தை வியாகம் 18 நிறுவனம் பெற்றுள்ளதால், ரசிகர்கள் இத்தொடரை ஜியோ சினிமா ஓடிடி தளத்திலும் இலவசமாக நேரலையில் கண்டு மகிழலாம். 

உத்தேச லெவன்

டெல்லி கேப்பிட்டல்ஸ்: பிரித்வி ஷா, ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க், அக்ஸர் படேல், ஷாய் ஹோப், ரிஷப் பந்த் (கேப்டன்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், குல்தீப் யாதவ், ஆண்ட்ரிச் நோர்ட்ஜே, முகேஷ் குமார், கலீல் அகமது, ரசிக் சலாம்.

மும்பை இந்தியன்ஸ்: ரோஹித் சர்மா, இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, நேஹல் வதேரா, ஹர்திக் பாண்டியா (கேப்டன்), டிம் டேவிட், முகமது நபி, ஜெரால்ட் கோட்ஸி, பியூஷ் சாவ்லா, ஜஸ்பிரித் பும்ரா..

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர் - ரிஷப் பந்த் (துணை கேப்டன்), இஷான் கிஷன்
  • பேட்ஸ்மேன்கள் - சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ரோஹித் சர்மா, திலக் வர்மா, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க்
  • ஆல்ரவுண்டர் - அக்ஷர் படேல்
  • பந்துவீச்சாளர்கள் - ஜஸ்பிரிட் பும்ரா, குல்தீப் யாதவ், ஜெரால்ட் கோட்ஸி

DC vs MI Dream11 Prediction, Today Match Prediction, Today Match DC vs MI, DC vs MI Dream11 Team, Fantasy Cricket Tips, DC vs MI Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between Delhi Capitals vs Mumbai Indians

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை