Delhi Capitals vs Rajasthan Royals Dream11 Prediction, IPL 2025: ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்து வருகிறது. அதிலும் ஒவ்வொரு ஆட்டத்திலும் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வருவதன் காரணமாக ரசிகர்களின் எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.

Advertisement

இந்நிலையில் இத்தொடரில் நாளை நடைபெறும் 32ஆவது லீக் போட்டியில் அக்ஸர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது டெல்லியில் உள்ள அருன் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இரு அணிகளும் தோல்விக்கு பிறகு இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளன. இதனால் இந்த ஆட்டத்தில் எந்த அணி வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

Advertisement

DC vs RR Match Details

  • மோதும் அணிகள்- டெல்லி கேப்பிட்டல்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ்
  • இடம் - அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானம், டெல்லி
  • நேரம் - ஏப்ரல் 16, இரவு 7.30 மணி (இந்திய நேரப்படி)

Arun Jaitley Stadium Pitch Report

ஐபிஎல் 2025 தொடரின் 32ஆவது போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த மைதானத்தில் இதுவரை 14 டி20 சர்வதேச போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், அதில் 9 முறை சேஸிங் செய்த அணிகளே வெற்றியைப் பதிவுசெய்துள்ளன. மேலும் சர்வதேச போட்டிகளை பொறுத்தவரையில் இங்கு முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர் 145 ரன்களாக உள்ளது. ஆனால் ஐபிஎல் தொடரை பொறுத்தவரை இந்த எண்ணிக்கை மாறுகிறது. ஏனெனில் கடந்த முறை இங்கு நடைபெற்ற 5 போட்டிகளிலும் சேஸிங் செய்த அணியே வெற்றியைப் பதிவுசெய்திருக்கும் நிலையில், இது அதிக ரன்களைக் கொண்ட ஆட்டங்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது. 

DC vs RR: Where to Watch?

Advertisement

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி இந்தியாவில் நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் ஜியோ ஹாட்ஸ்டாரிலும் நேரலையில் கணலாம்.

DC vs RR Head To Head Record

  • மோதிய போட்டிகள் – 29
  • டெல்லி கேப்பிட்டல்ஸ் - 14
  • ராஜஸ்தான் ராயல்ஸ் – 15

DC vs RR Dream11 Team

  • விக்கெட் கீப்பர்கள் - சஞ்சு சாம்சன் (கேப்டன்), கேஎல் ராகுல், துருவ் ஜூரெல், அபிஷேக் போரெல்
  • பேட்ஸ்மேன்கள் - கருண் நாயர் (துணைக்கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், டிரிஸ்டன் ஸ்டப்ஸ்
  • ஆல்-ரவுண்டர்கள் - ரியான் பராக், விபராஜ் நிகம்
  • பந்து வீச்சாளர்கள்- குல்தீப் யாதவ், ஜோஃப்ரா ஆர்ச்சர்.
Advertisement

DC vs RR Predicted Playing 11

Delhi Capitals XI: ஃபாஃப் டு பிளெசிஸ், அபிஷேக் போரல், கருண் நாயர், கேஎல் ராகுல், அக்சர் படேல் (கேப்டன்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அசுதோஷ் சர்மா, விபராஜ் நிகம், மிட்செல் ஸ்டார்க், குல்தீப் யாதவ், மோகித் சர்மா.

இம்பேக்ட் வீரர் - முகேஷ் குமார்.

Advertisement

Rajasthan Royals XI: யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (கேட்ச் மற்றும் விக்கெட் கீப்பர்), ரியான் பராக், துருவ் ஜூரல், ஷிம்ரோன் ஹெட்மியர், நிதிஷ் ராணா, வனிந்து ஹசரங்கா, ஜோஃப்ரா ஆர்ச்சர், மகேஷ் தீக்ஷனா, சந்தீப் சர்மா, துஷார் தேஷ்பாண்டே.

இம்பாக்ட் வீரர் - குமார் கார்த்திகேயா.

DC vs RR Dream11 Prediction, DC vs RR, DC vs RR Dream11 Team, Fantasy Cricket Tips, IPL 2025, DC vs RR Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Delhi Capitals vs Rajasthan Royals

Advertisement

Disclaimer: இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News