Delhi Capitals vs Sunrisers Hyderabad Dream11 Prediction, IPL 2025: ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் நாளுக்கு நாள் விறுவிறுப்புக்கு பஞ்சமின்றி நடைபெற்று வருகிறது. 

Advertisement

இதில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் அக்ஸர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்த்து பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டி விசாகப்பட்டினத்தில் உள்ள விடிசிஏ கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் இவ்விரு அணிகளும் தங்களுடைய முதல் லீக் போட்டியில் வெற்றிபெற்று அசத்தியுள்ளன. மேற்கொண்டு இரு அணிகளிலும் அதிரடியான வீரர்கள் இருப்பதால் இந்த ஆட்டத்தில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

Advertisement

DC vs SRH: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள்- டெல்லி கேப்பிட்டல்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
  • இடம் -   விடிசிஏ கிரிக்கெட் மைதானம், ஹைதராபாத்
  • நேரம் - மார்ச் 30, மாலை 3.30 மணி (இந்திய நேரப்படி)

DC vs SRH Pitch Report

ஐபிஎல் 2025 தொடரின் 10 லீக் போட்டி விசாகப்பட்டினத்தில் உள்ள டாக்டர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி ஏசிஏ-விடிசிஏ கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இங்கு இதுவரை 10 சர்வதேச டி20 போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், அதில் 7 முறை சேஸிங் செய்த அணிகள் வெற்றியைப் பதிவுசெய்துள்ளது. மேலும் இங்கு சர்வதேச டி20 போட்டியில் முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர் 128 ரன்களாக உள்ளது. முன்னதாக நடப்பு ஐபிஎல் தொடரில் இங்கு நடைபெற்ற போட்டியில் சேஸிங் செய்த அணி வெற்றியைப் பதிவுசெய்துள்ளது. இதனால் டாஸ் வெல்லு அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம். 

DC vs SRH: Where to Watch?

Advertisement

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி இந்தியாவில் நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் ஜியோ ஹாட்ஸ்டாரிலும் நேரலையில் கணலாம்.

DC vs SRH Head To Head Record

  • மோதிய போட்டிக்கள் – 24
  • சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - 13
  • டெல்லி கேபிடல்ஸ் - 11

DC vs SRH Dream11 Team

  • விக்கெட் கீப்பர் - ஹென்ரிச் கிளாசென், இஷான் கிஷான்
  • பேட்ஸ்மேன்கள் - ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), டிராவிஸ் ஹெட், அசுதோஷ் சர்மா, டிரிஸ்டன் ஸ்டப்ஸ்
  • ஆல்-ரவுண்டர்கள் - அக்சர் படேல், அபிஷேக் சர்மா (துணை கேப்டன்), நிதிஷ் குமார் ரெட்டி
  • பந்து வீச்சாளர்கள் - மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ்.
Advertisement

Delhi Capitals vs Sunrisers Hyderabad Probable Playing XI

Delhi Capitals Probable Playing XI : ஜேக் ஃப்ரேசர்-மெக்கர்க், ஃபாஃப் டு பிளெசிஸ், கேஎல் ராகுல், அபிஷேக் போரெல், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அக்சர் படேல் (கேப்டன்), விப்ராஜ் நிகம், குல்தீப் யாதவ், மிட்செல் ஸ்டார்க், முகேஷ் குமார், மோஹித் சர்மா.

இம்பேக்ட் வீரர் - அஷுதோஷ் சர்மா.

Advertisement

Sunrisers Hyderabad Probable Playing XI: டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், நிதிஷ் குமார் ரெட்டி, ஹென்ரிச் கிளாசென், அனிகேத் வர்மா, அபினவ் மனோகர், பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஹர்ஷல் படேல், முகமது ஷமி, சிமர்ஜீத் சிங்.

இம்பாக்ட் வீரர் - ஆடம் ஸாம்பா.

DC vs SRH Dream11 Prediction, DC vs SRH, DC vs SRH Dream11 Team, Fantasy Cricket Tips, IPL 2025, DC vs SRH Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Delhi Capitals vs Sunrisers Hyderabad

Advertisement

Disclaimer: இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News