அபுதாபி டி10 லீக் தொடரின் நடப்பாண்டு சீசன் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. இதில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் டெக்கான் கிளாடியேட்டர்ஸ் மற்றும் மோரிஸ்வில்லே சாம்ப் ஆர்மி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அபுதாபியில் நடைபெற்ற இந்த இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற டெக்கான் கிளாடியேட்டர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

Advertisement

இதையடுத்து களமிறங்கிய் மோரிஸ்வில்லே அணிக்கு ஷர்ஜீல் கான் மற்றும் ஃபாஃப் டூ பிளெசிஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஷர்ஜீல் கான் 5 ரன்னில் நடையைக் கட்ட, அடுத்து களமிறங்கிய சரித் அசலங்கா 13 ரன்களிலும், அதிரடியாக விளையாடிய ஆண்ட்ரிஸ் கௌஸ் 21 ரன்னிலும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். அவர்களைத் தொடர்ந்து பொறுப்புடன் விளையாடி வந்த ஃபாஃப் டூ பிளெசிஸ்லும் 34 ரன்களில் தனது விக்கெட்டி இழந்தார். 

Advertisement

பின்னர் களமிறங்கிய வீரர்களில் கரிம் ஜானத் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 16 ரன்களைச் சேர்க்க, மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதனால் மோரிஸ்வில்லே சாம்ப் ஆர்மி அணி 10 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 104 ரன்களை மட்டுமே சேர்த்தது. டெக்கான் அணி தரப்பில் ரிச்சர்ட் கிளீசன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

அதன்பின் எளிய இலக்கை நோக்கி விளையாடிய டெக்கான் கிளாடியேட்டர்ஸ் அணிக்கு டாம் கொஹ்லர் காட்மோர் மற்றும் நிக்கோலஸ் பூரன் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்து கொடுத்தனர். பின் ஒரு பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 28 ரன்களில் நிக்கோலஸ் பூரான் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ரைலீ ரூஸோவும் 12 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார். 

இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டாம் கொஹ்லர் காட்மோர் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தியதுடன் 21 பந்துகளில் 5 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 51 ரன்களையும், ஜோஸ் பட்லர் 12 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் டெக்கான் கிளாடியேட்டர்ஸ் அணி 6.5 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன், 8 விக்கெட் வித்தியாசத்தில் மோரிஸ்வில்லே அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தையும் வென்று அசத்தியது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News