புவனேஷிற்கு பதிலாக இந்த பவுலரை அணியில் சேருங்கள் - டேனிஷ் கனேரியா!

Updated: Tue, Oct 04 2022 13:24 IST
Deepak Or Bhuvneshwar? Former Pakistan Spinner Danish Kaneria Reveals His Choice (Image Source: Twitter)

ஸ்விங் கிங் என்ற பெயர் பெற்ற புவனேஸ்வர் குமார் ஒன்றுக்கும் மேற்பட்ட காயம் காரணமாக கடந்த சில ஆண்டுகள் சர்வதேச இந்திய அணிக்காக விளையாட முடியாமல் ஓய்வில் இருந்தார். பின் அதிலிருந்து மீண்டுவந்த புவனேஷ்வர் குமார், பந்தை வேகமாக வீசவும் முடியாமல், பந்தை ஸ்விங் செய்யவும் முடியாமல் தடுமாறியதால், அசிங்கப்படுவதற்கு முன்பே இவர் ஓய்வை அறிவித்துவிடுங்கள் என்று கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.

ஆனால் அந்த விமர்சனத்தையெல்லாம் காதில் போட்டுக் கொள்ளாமல், தன்னால் சிறப்பாக செயல்பட முடியும் என்பதை வெளிப்படுத்திய புவனேஷ்வர் குமார் தன்னுடைய பழைய ஆட்டத்தை வெளிப்படுத்தி டி20 தொடருக்கான ரெகுலர் வீரராக வலம் வரத் தொடங்கினார். அடுத்தடுத்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உலக கிரிக்கெட் வட்டத்தில் நல்ல பெயரை சம்பாதித்து வந்த புவனேஷ் குமார், ஆசிய கோப்பையில் தன் பெயருக்கு தானே கலங்கத்தை தேடிக்கொண்டார்.

ஆசியக் கோப்பை தொடரில் முக்கியமான இரண்டு போட்டிகளிலும், அதிக ரன்களை விட்டுக் கொடுத்து இந்திய அணியின் தோல்விக்கு காரணமாக திகழ்ந்த புவனேஸ்வர் குமார், நடைபெற்ற முடிந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியிலும் அதிக ரன்களை விட்டுக் கொடுத்து அதிருப்தியை சம்பாரித்துள்ளார்.

கடைசி இரண்டு ஓவரில் 19 ரன்கள் எடுத்தால் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றுவிடும் என்ற நிலையில் 19ஆவது ஓவரை வீசிய புவனேஷ் குமார் 16 ரன்கள் வாரி இறைத்தார். இதன் காரணமாக இந்திய அணி வெற்றிபெற வேண்டிய போட்டியில் பரிதாபமாக தோல்வியை தழுவியது.

இதன் காரணமாக தற்போதைய இந்திய அணியில் 19ஆவது ஓவரை வீசக்கூடிய பந்துவீச்சாளர் யார் என்பதில் மிகப்பெரிய சந்தேகம் உள்ளது, குறிப்பாக பும்ரா காயம் காரணமாக இடம்பெறாமல் போனதால் இந்திய அணிக்கு இது மிகப்பெரிய தலைவலியாகவே அமைந்துள்ளது.

இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா, உலகக் கோப்பை தொடரில் புவனேஸ்வர் குமாரின் பந்துவீச்சு எடுபடாது என்றும் அவரை நீக்கிவிட்டு தீபக் சஹாருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்றும் தன்னுடைய யூட்யூப் சேனலில் பேசியுள்ளார்.

இதுகுறித்து டேனிஷ் கனேரியா பேசுவையில்,“ ஒன்று மட்டும் நன்றாக தெரிகிறது, புவனேஸ்வர் குமாருக்கு பந்து ஸ்விங்காகவில்லை என்றால் அவருடைய பந்து நிச்சயம் அடித்து துவம்சம் செய்யப்படும். குறிப்பாக ஆஸ்திரேலிய மைதானத்தில் டெத் ஓவர்களில் புவனேஸ்வர் குமார் வீசும் பந்தை நாலு திசையிலும் அடித்து பந்தாடுவார்கள். 

இதையெல்லாம் வைத்துப் பார்த்தால் புவனேஸ்வர் குமாரை விட தீபக்சஹர் தான் அணிக்கு சிறந்த தேர்வாக இருப்பார். தீபக் சஹர் தேவைப்பட்டால் பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்படுவார்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை