ஐபிஎல் 2022: அணிகள் ஏலத்தில் ரன்வீர்-தீபிகா!

Updated: Fri, Oct 22 2021 15:01 IST
Image Source: Google

ஐபிஎல் தொடங்கப்பட்ட 2008லிருந்து ஒவ்வொரு சீசனிலும் 8 அணிகள் ஆடிவந்த நிலையில், அடுத்த சீசனில்(ஐபிஎல் 2022) கூடுதலாக 2 அணிகள் சேர்க்கப்படுகின்றன.

அதனால், அடுத்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடக்கவுள்ளது. கூடுதலாக 2 அணிகள் சேர்க்கப்படுவதன் மூலம் பிசிசிஐக்கு கூடுதலாக ரூ.7000 கோடி வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய 2 அணிகளில் ஒரு அணி, உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியத்தை கொண்ட அகமதாபாத்தின் பெயரில் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஎல் அணிகளுக்கான ஏலத்திற்கான அறிவிப்பு வரும்போது, புதிய 2 அணிகள் எந்த ஊரை மையப்படுத்தியவை என்பது தெரியவரும்.

புதிய ஐபிஎல் அணிக்கான ஏல விண்ணப்பத்தை பெறும் கால அவகாசம் ஆரம்பத்தில் அக்டோபர் 5 வரை என்று அறிவிக்கப்பட்டு, பின்னர் பல தரப்பினரின் கோரிக்கையை ஏற்று அக்டோபர் 20 வரை நீட்டித்தது பிசிசிஐ.

இந்த 2 அணிகளையும் வாங்குவதற்கான ஏலம் வரும் அக்டோபர் 25ஆம் தேதியன்று துபாயில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெறவுள்ளது. இதற்கான ஏல விண்ணப்பங்களை ரூ. 10 லட்சம் கொடுத்து வாங்கியிருந்தால் மட்டுமே ஏலத்தில் பங்கேற்க முடியும். ஆண்டுக்கு குறைந்தது ரூ.2000 கோடி வருவாய் ஈட்டும் தனி நபரோ அல்லது நிறுவனமோ ஐபிஎல் அணிகளை ஏலம் எடுக்கலாம்.

அதானி குழுமம், ஆர்பி சஞ்சீவ் கோயங்கே ஆகிய இந்திய நிறுவனங்களும், மான்செஸ்டர் யுனைடெட் உள்ளிட்ட வெளிநாட்டு நிறுவனங்களும் ஐபிஎல் அணிகளை கைப்பற்ற போட்டி போடும் நிலையில், பாலிவுட் ஜோடியான ரன்வீர் சிங்  - தீபிகா படுகோனே ஜோடியும் இந்த கடும் போட்டியில் நுழைந்துள்ளது.

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

பாலிவுட் நட்சத்திரங்கள் ஷாருக்கான் மற்றும் பிரீத்தி ஜிந்த ஆகியோர் முறையே கேகேஆர் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகளின் உரிமையாளர்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இப்போது அந்த பட்டியலில் ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே இணைய போட்டியிருகின்றனர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை