WPL 2024: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!

Updated: Sat, Mar 09 2024 22:24 IST
WPL 2024: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்! (Image Source: Cricketnmore)

இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வரும் இரண்டாவது சீசன் மகளிர் பிரீமியர் லீக் தொடர் மீதான ரசிகர்களின் ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதில் நாளை நடைபெறும் 17ஆவது லீக் போட்டியில் ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், மெக் லெனிங் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் வெற்றிபெறும் அணியே புள்ளிப்பட்டியலின் முதலிரண்டு இடங்களுக்குள் இடம்பெறும் என்பதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

போட்டி தகவல்கள்

  • மோதும் அணி  - டெல்லி கேப்பிட்டல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
  • இடம் - அருண் ஜெட்லி மைதானம், டெல்லி
  • நேரம் - இரவு 7.30 மணி

பிட்ச் ரிப்போர்ட்

டெல்லியிலுள்ள அருண் ஜெட்லி மைதானமானது சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. மேலும் இங்கு பவுண்டரி எல்லைகள் சிறியது என்பதால் களத்தில் நின்று விளையாடும் பேட்டர்களும் அபாரமாக செயல்படமுடியும். அதேசமயம் இங்கு எதிரணியை தடுப்பது சவாலாக இருக்கும் என்பதால், டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம்.

நேரலை

மகளிர் பிரீமியர் லீக் தொடரின் நடப்பாண்டு சீசனை இந்தியாவில் ஸ்போர்ட்ஸ் 18 மற்றும் ஸ்போர்ட்ஸ் 18 ஹச்டி தொலைக்காட்சிகளில் ரசிகர்கள் நேரலை கண்டுகளிக்கலாம். அதேபோல் ஜியோ சினிமா ஓடிடி தளத்திலும் இத்தொடரை ரசிகர்கள் இலவசமாக காணலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 03
  • டெல்லி கேப்பிட்டல்ஸ் - 03
  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - 00

உத்தேச லெவன்

டெல்லி கேப்பிட்டல்ஸ்: மெக் லானிங் (கே), ஷஃபாலி வர்மா, ஆலிஸ் கேப்ஸி, அனாபெல் சதர்லேண்ட், ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஜெஸ் ஜோனசன், தனியா பாட்டியா, அருந்ததி ரெட்டி, ராதா யாதவ், டைட்டாஸ் சாது, ஷிகா பாண்டே

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: ஸ்மிருதி மந்தனா (கே), சப்பினேனி மேகனா, எலிஸ் பெர்ரி, ரிச்சா கோஷ், சோஃபி டிவைன், ஜார்ஜியா வேர்ஹாம், சோஃபி மோலினக்ஸ், ஏக்தா பிஷ்ட், ஆஷா சோபனா, சிம்ரன் பகதூர், ரேணுகா தாக்கூர் சிங்

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்: ரிச்சா கோஷ்
  • பேட்டர்ஸ்: மெக் லானிங், ஸ்மிரிதி மந்தனா, ஷஃபாலி வர்மா
  • ஆல்-ரவுண்டர்கள்: சோஃபி டிவைன், எல்லிஸ் பெர்ரி (துணை கேப்டன்), ஜார்ஜ் வேர்ஹாம், ஆலிஸ் கேப்ஸி (கேப்டன்), ஜெஸ் ஜோனசன், அனாபெல் சதர்லேண்ட்
  • பந்து வீச்சாளர்கள்: சோஃபி மோலினக்ஸ்

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை