WPL 2024: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs குஜராத் ஜெயண்ட்ஸ்- ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!

Updated: Tue, Mar 12 2024 21:58 IST
WPL 2024: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs குஜராத் ஜெயண்ட்ஸ்- ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்! (Image Source: Cricketnmore)

இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வரும் இரண்டாவது சீசன் மகளிர் பிரீமியர் லீக் தொடர் மீதான ரசிகர்களின் ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. மேலும் ஆர்சிபி அணியும் ஏறத்தாழ நாக் அவுட் சுற்றை உறுதிசெய்துள்ளது. இந்நிலையில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இப்போட்டியில் டெல்லி அணி வெற்றிபெறும் பட்சத்தில் நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

போட்டி தகவல்கள்

  • மோதும் அணி  - டெல்லி கேப்பிட்டல்ஸ் vs குஜராத் ஜெயண்ட்ஸ்
  • இடம் - அருண் ஜெட்லி மைதானம், டெல்லி
  • நேரம் - இரவு 7.30 மணி

பிட்ச் ரிப்போர்ட்

டெல்லியிலுள்ள அருண் ஜெட்லி மைதானமானது சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. மேலும் இங்கு பவுண்டரி எல்லைகள் சிறியது என்பதால் களத்தில் நின்று விளையாடும் பேட்டர்களும் அபாரமாக செயல்படமுடியும். அதேசமயம் இங்கு எதிரணியை தடுப்பது சவாலாக இருக்கும் என்பதால், டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம்.

நேரலை

மகளிர் பிரீமியர் லீக் தொடரின் நடப்பாண்டு சீசனை இந்தியாவில் ஸ்போர்ட்ஸ் 18 மற்றும் ஸ்போர்ட்ஸ் 18 ஹச்டி தொலைக்காட்சிகளில் ரசிகர்கள் நேரலை கண்டுகளிக்கலாம். அதேபோல் ஜியோ சினிமா ஓடிடி தளத்திலும் இத்தொடரை ரசிகர்கள் இலவசமாக காணலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 03
  • டெல்லி கேப்பிட்டல்ஸ் - 02
  • குஜராத் ஜெயண்ட்ஸ் - 01

உத்தேச லெவன்

டெல்லி கேப்பிட்டல்ஸ்: மெக் லானிங் (கே), ஷஃபாலி வர்மா, ஆலிஸ் கேப்ஸி, ஜெமிமா ரோட்ரிக்ஸ், மரிஸான் கேப், ஜெஸ் ஜோனாசன், அருந்ததி ரெட்டி, தனியா பாட்டியா, ஷிகா பாண்டே, டைட்டாஸ் சாது, ராதா யாதவ்.

குஜராத் ஜெயண்ட்ஸ்: பெத் மூனி (கே), லாரா வோல்வார்ட், தயாளன் ஹேமலதா, ஃபோப் லிட்ச்ஃபீல்ட், ஆஷ்லீக் கார்ட்னர், பாரதி ஃபுல்மாலி, கேத்ரின் பிரைஸ், தனுஜா கன்வர், மன்னத் காஷ்யப், மேக்னா சிங், ஷப்னம் ஷகில்

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்கள்: பெத் மூனி (துணை கேப்டன்)
  • பேட்டர்ஸ்: மெக் லானிங், லாரா வால்வார்ட், ஷஃபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ்
  • ஆல்-ரவுண்டர்கள்: ஜெஸ் ஜோனாசென், ஆலிஸ் கேப்ஸி (கேப்டன்), மரிஸான் கேப், ஆஷ்லே கார்ட்னர், கேத்ரின் பிரைஸ்
  • பந்து வீச்சாளர்: மேக்னா சிங்

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை