WPL 2024: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்- ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!

Updated: Mon, Mar 04 2024 20:16 IST
WPL 2024: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்- ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்! (Image Source: Cricketnmore)

இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வரும் இரண்டாவது சீசன் மகளிர் பிரீமியர் லீக் தொடர் மீதான ரசிகர்களின் ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதில் நாளை நடைபெறும் 12ஆவது லீக் போட்டியில் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், மெக் லெனிங் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. மேலும் நடப்பு சீசனின் முதல் பாதி லீக் போட்டிகள் பெங்களூருவில் நடைபெற்று வந்த நிலையில், இனிவரும் லீக் போட்டிகள் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறவுள்ளது. அந்தவகையில் நாளை நடைபெறும் இந்த போட்டியும் டெல்லியில் நடைபெறவுள்ளதால் இதன் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. 

போட்டி தகவல்கள்

  • மோதும் அணி  - டெல்லி கேப்பிட்டல்ஸ் மகளிர் vs மும்பை இந்தியன்ஸ் மகளிர்
  • இடம் - அருண் ஜெட்லி மைதானம், டெல்லி
  • நேரம் - இரவு 7.30 மணி

பிட்ச் ரிப்போர்ட்

டெல்லியிலுள்ள அருண் ஜெட்லி மைதானமானது சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. மேலும் இங்கு பவுண்டரி எல்லைகள் சிறியது என்பதால் களத்தில் நின்று விளையாடும் பேட்டர்களும் அபாரமாக செயல்படமுடியும். அதேசமயம் இங்கு எதிரணியை தடுப்பது சவாலாக இருக்கும் என்பதால், டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம்.

நேரலை

மகளிர் பிரீமியர் லீக் தொடரின் நடப்பாண்டு சீசனை இந்தியாவில் ஸ்போர்ட்ஸ் 18 மற்றும் ஸ்போர்ட்ஸ் 18 ஹச்டி தொலைக்காட்சிகளில் ரசிகர்கள் நேரலை கண்டுகளிக்கலாம். அதேபோல் ஜியோ சினிமா ஓடிடி தளத்திலும் இத்தொடரை ரசிகர்கள் இலவசமாக காணலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 04
  • டெல்லி கேப்பிட்டல்ஸ் - 01
  • மும்பை இந்தியன்ஸ் - 03

உத்தேச லெவன்

டெல்லி கேப்பிட்டல்ஸ்: மெக் லானிங் (கே), ஷஃபாலி வர்மா, ஆலிஸ் கேப்ஸி, ஜெமிமா ரோட்ரிக்ஸ், அனாபெல் சதர்லேண்ட், ஜெஸ் ஜோனசன், அருந்ததி ரெட்டி, தனியா பாட்டியா, டைட்டாஸ் சாது, ராதா யாதவ், ஷிகா பாண்டே.

மும்பை இந்தியன்ஸ்: ஹீலி மேத்யூஸ், யாஸ்திகா பாட்டியா, நாட் ஸ்கிவர்-பிரண்ட் (கே), அமெலியா கெர், பூஜா வஸ்த்ரகர், இஸி வாங், எஸ் சஜனா, அமன்ஜோத் கவுர், ஹுமைரா காசி, கீர்த்தனா பாலகிருஷ்ணன், சைகா இஷாக்.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்கள்: யாஸ்திகா பாட்டியா
  • பேட்டர்ஸ்: மெக் லானிங், ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஷெஃபாலி வர்மா
  • ஆல்-ரவுண்டர்கள்: ஆலிஸ் கேப்சி (கேப்டன்), ஹேலி மேத்யூஸ், நாட் ஸ்கிவர்-பிரண்ட் (துணை கேப்டன்), அமெலியா கெர், அனாபெல் சதர்லேண்ட்
  • பந்து வீச்சாளர்: பூஜா வஸ்த்ரகர்

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை