இங்கிலாந்து அணியானது, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் அபாரமாக விளையாடிய இந்திய அணி 4-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றி அசத்தியது. முன்னதாக இத்தொடருக்கான இங்கிலாந்து அணியில் சேர்க்கப்பட்டிருந்த நட்சத்திர வீரர் ஹாரி ப்ரூக் தனிப்பட்ட காரணங்களினால் இத்தொடரிலிருந்து விலகினார். 

Advertisement

இதையடுத்து அவர் இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரில் கம்பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் தனிப்பட்ட காரணங்களினால் ஐபிஎல் தொடரிலிருந்தும் ஹாரி ப்ரூக் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி நடந்து முடிந்த வீரர்கள் ஏலத்தில் ஹாரி ப்ரூக்கை ரூ.4 கோடிக்கு டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ஏலத்தில் எடுத்திருந்தது. 

Advertisement

கடந்தாண்டு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய ஹாரி ப்ரூக், 11 போட்டிகளில் விளையாடி ஒரு சதம் உள்பட 190  ரன்களை மட்டுமே எடுத்திருந்தார். இதனால் அவர் வீரர்கள் ஏலத்திற்கு முன்னரே ஹைதராபாத் அணி கழட்டிவிட்டது. இந்நிலையில் தான் வீரர்கள் மினி ஏலத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அவரை ஏலத்தில் எடுத்தது.

இதன் காரணமாக அவர் டேவிட் வார்னருடன் இணைந்து தொடக்க வீரராகவோ அல்லது நான்காம் இடத்திலோ களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது தொடரிலிருந்தே ஹாரி ப்ரூக் விலகியுள்ளது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அவருக்கு சரியான மாற்று வீரரை தேர்வு செய்யும் முயற்சியில் தற்போது அந்த அணி இறங்கியுள்ளது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News