ரோஹித் சர்மாவை டிரேடிங் முறையில் வங்க நினைத்த ஐபிஎல் அணி; மறுத்த மும்பை இந்தியன்ஸ்!

Updated: Sun, Dec 17 2023 15:08 IST
ரோஹித் சர்மாவை டிரேடிங் முறையில் வங்க நினைத்த ஐபிஎல் அணி; மறுத்த மும்பை இந்தியன்ஸ்! (Image Source: Google)

ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நிலையில் இத்தொடருக்கான வீரர்கள் மினி ஏலம் வரும் டிசம்பர் 19ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இதற்கு முன்னதாக வீரர்கள் டிரேடிங் முறையில் மாற்றப்பட்டனர். அதில் முக்கியமாக குஜராத் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியது. 

மேலும் தங்கள் அணியின் கேப்டனாக இருந்த ரோஹித் சர்மாவை கேப்டன் பொறுப்பில் இருந்து வெளியேற்றி புதிய கேப்டனாக ஹார்திக் பாண்டியவை அறிவித்துள்ளது. இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்ட பிறகு மும்பை இந்தியன்ஸ் அணியின் நிர்வாகத்தின் மீது கிரிக்கெட் ரசிகர்கள் அதிருப்தியும், விமர்சனங்களையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

இப்படி ரசிகர்கள் ஒருபுறம் காட்டமான கருத்துக்களை தெரிவித்து வரும் வேளையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடி வரும் சக வீரர்களான சூரியகுமார் யாதவ், ஜஸ்ப்ரீத் பும்ரா, தவால் குல்கர்னி போன்ற வீரர்களும் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகத்தின் இந்த முடிவுக்கு எதிராக தங்களது ஆதங்கங்களை வெளிப்படுத்தி உள்ளனர்.

இந்நிலையில் ரோஹித் சர்மா நிச்சயம் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்படுவார் என்பதை தெரிந்துகொண்ட ஒரு ஐபிஎல் அணி, மும்பை இந்தியன்ஸ் ஹார்டிக் பாண்டியாவை டிரேடிங் செய்ய அணுகிய போதே ரோஹித் சர்மாவை மும்பை அணியில் இருந்து ட்ரேடிங் செய்ய முயன்றதாக தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது. 

அந்த வகையில் ஏற்கனவே மும்பை இந்தியன்ஸ் அணி பாண்டியாவை குஜராத் அணியிடமிருந்து டிரேடிங் செய்ய முயன்று வருவதாக தெரிந்ததால் நிச்சயம் பாண்டியா புதிய கேப்டனாக மாற்றப்படுவார் என்பதை யூகித்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் பயிற்சியாளரான ரிக்கி பாண்டிங் தான் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் டிரேடிங் செய்ய பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்.

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் ரிக்கி பாண்டிங் தனது அணி நிர்வாகத்துடன் இணைந்து இந்த பேச்சுவார்த்தையை நடத்தியிருக்கிறார். ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் அதை மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. அதேபோல் கொல்கத்தா அணியும் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியான நிலையில் அதனையும் மும்பை அணி மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை