ஐபிஎல் 2025: செதிகுல்லா அடலை ஒப்பந்தம் செய்தது டெல்லி கேப்பிட்டல்ஸ்!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 58ஆவது லீக் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்த்து அக்ஸர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது தர்மசாலாவில் உள்ள இமாச்சலப் பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் பஞ்சாப் கிங்ஸ் அணி ஏறத்தாழ பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை உறுதிசெய்துள்ள நிலையில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியாது பிளே ஆஃப் சுற்று வாய்ப்பில் நீடிக்க இந்த வெற்றியானது மிகவும் அவசியமாகும். இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இருந்து முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக்கிற்கு மாற்று வீரரை அந்த அணி அறிவித்துள்ளது. முன்னதாக கடந்த ஐபிஎல் வீரர்கள் மெகா ஏலத்தில் ஹாரி புரூக்கை ரூ.6.25 கோடிக்கு டெலி கேப்பிட்டல்ஸ் அணி ஏலத்தில் எடுத்திருந்தது.
ஆனால் ஹாரி புரூக், தேசிய அணியுடனான தனது கடமைகளுக்கு தயாராக வேண்டியதன் அவசியத்தை மேற்கோள் காட்டி இத்தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். ஏனெனில் இங்கிலாந்து அணியின் புதிய ஒருநாள் மற்றும் டி20 கேப்டனாக ஹாரி புரூக் தேர்வு செய்யப்பட்டிருந்தார். இதனால் ஹாரி புரூக் ஐபிஎல் தொடர்களில் பங்கேற்க ஓரண்டு வரை தடை விதிக்கப்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
மேற்கொண்டு ஹாரி புரூக் இல்லாதது டெல்லி அணிக்கும் பெரும் பின்னடைவாக இருந்தது. இந்நிலையில் அவருக்கு பதிலாக ஆஃப்கானிஸ்தானின் இளம் வீரர் செதிகுல்லா அடலை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ரூ.1.25 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. இவர் இதுவரை 49 போட்டிகளில் விளையாடி 1507 ரன்களைக் குவித்துள்ளார். இதன் மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் பேட்டிங் மேலும் வலுபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Also Read: LIVE Cricket Score
டெல்லி கேப்பிட்டல்ஸ்: கேஎல் ராகுல், ஜேக் ஃபிரேசர்-மெக்குர்க், கருண் நாயர், அபிஷேக் போரல், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அக்ஸர் படேல், குல்தீப் யாதவ், நடராஜன், மிட்செல் ஸ்டார்க், சமீர் ரிஸ்வி, அஷுதோஷ் சர்மா, மோஹித் ஷர்மா, ஃபஃப் டு பிளெஸ்சிஸ், முகேஷ் குமார், தர்ஷன் நல்கண்டே, விப்ராஜ் நிகம், துஷ்மந்த சமீரா, டோனோவன் ஃபெரீரா, அஜய் மண்டல், மன்வந்த் குமார், திரிபுரானா விஜய், மாதவ் திவாரி, செதிகுல்லா அடல்*.