ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்றுடன் 49 லீக் ஆட்டங்கள் முடிந்துள்ள நிலையில் இன்று இரவு 7.30 மணிக்கு மும்பை பிரபோர்ன் மைதானத்தில் நடைபெறும் 50ஆவது போட்டியில் ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதவுள்ளன.

Advertisement

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - டெல்லி கேப்பிட்டல்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
  • இடம் - ப்ரபோர்ன் மைதானம், மும்பை
  • நேரம் - இரவு 7.30 மணி
Advertisement

போட்டி முன்னோட்டம்

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இதுவரை 9 போட்டிகளில் விளையாடியுள்ள ஹைதராபாத் அணி 5 வெற்றி 4 தோல்விகளுடன் 10 புள்ளிகள் பெற்று பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது. ‘லீக்’ முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘ப்ளே ஆஃப்’ சுற்றுக்கு தகுதி பெறும் என்பதால், இன்றைய ஆட்டத்தில் வென்று நான்காவது இடத்திற்கு முன்னேற ஹைதராபாத் அணி தீவிர முனைப்பு காட்டும். 

பேட்டிங்கில் அபிஷேக் ஷர்மா (324 ரன்கள்), எய்டன் மார்க்ரம் (263 ரன்கள்), ராகுல் திரிபாதி (228 ரன்கள்), கேன் வில்லியம்சன் (195 ரன்கள்) அமர்க்களப்படுத்துகின்றனர். பவுலிங்கில் உம்ரான் மாலிக், நடராஜன், புவனேஷ்வர் குமார் பலம் சேர்க்கின்றனர்.

மறுபுறம் இந்த தொடரில் இதுவரை 9 போட்டிகளில் விளையாடியுள்ள டெல்லி  அணி 4 வெற்றி 5 தோல்விகளுடன் 8 புள்ளிகள் பெற்று பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது.  அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க அந்த அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறுவது மிக அவசியம். 

Advertisement

பேட்டிங்கில் டேவிட் வார்னர் (264 ரன்கள்), பிருத்வி ஷா (259 ரன்கள்), ரிஷப் பந்த் (234 ரன்கள்) மிரட்டுகின்றனர். பவுலிங்கில் குல்தீப் யாதவ் தவிர்த்து மற்றவர்கள் அனைவரும் எக்கச்சக்க ரன்களை அள்ளிக் கொடுக்கிறார்கள். இதனால், பந்துவீச்சைப் பலப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் டெல்லி அணி இருக்கிறது.

புள்ளிப்பட்டியலில் முன்னேறவும், பிளே-ஆஃப் வாய்ப்பில் நீடிக்கவும் இவ்விரு அணிகளுக்கும் இந்த போட்டி முக்கியமானதாக கருதப்படுவதால், இவ்விரு அணிகளும் சிறப்பாக ஆடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 9
  • டெல்லி வெற்றி - 4
  • ஹைதராபாத் வெற்றி - 5
Advertisement

உத்தேச அணி

டெல்லி கேப்பிட்டல்ஸ்: பிருத்வி ஷா, டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், லலித் யாதவ், ரிஷப் பண்ட் (கே), ரோவ்மன் பவல், அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், முஸ்தாபிசுர் ரஹ்மான், சேத்தன் சகாரியா

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: அபிஷேக் சர்மா, கேன் வில்லியம்சன் (கே), ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம், நிக்கோலஸ் பூரன், வாஷிங்டன் சுந்தர், ஷஷாங்க் சிங், மார்கோ ஜான்சன், புவனேஷ்வர் குமார், டி.நடராஜன், உம்ரான் மாலிக்.

Advertisement

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • கீப்பர்: ரிஷப் பந்த்
  • பேட்டர்ஸ்: டேவிட் வார்னர், ராகுல் திரிபாதி, அபிஷேக் சர்மா, கேன் வில்லியம்சன்
  • ஆல்-ரவுண்டர்கள்: ஐடன் மார்க்ரம், லலித் யாதவ்
  • பந்துவீச்சாளர்கள்: டி நடராஜன், குல்தீப் யாதவ், முஸ்தாபிசுர் ரஹ்மான், உம்ரான் மாலிக்

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News