ஐபிஎல் 2021: ஹைதராபாத் அணிக்கெதிரான போட்டியில் டெல்லி பேட்டிங்!

Updated: Sun, Apr 25 2021 20:03 IST
Cricket Image for ஐபிஎல் 2021: ஹைதராபாத் அணிக்கெதிரான போட்டியில் டெல்லி பேட்டிங்! (Image Source: Google)

ஐபிஎல் தொடரின் 20ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் மொதவுள்ளது. 

சென்னையில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது. 

இன்றைய போட்டிக்கான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் கரோனாவிலிருந்து மீண்டு வந்த அக்சர் பட்டேல் சேர்க்கப்பட்டுள்ளார். அதேசமயம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் புவனேஷ்வர் குமாருக்கு பதில் ஜெகதீச சுஜித் மற்றும் கேன் வில்லியம்சன் அணியில் இணைந்துள்ளார்.

எஸ்.ஆர்.எச்: டேவிட் வார்னர், ஜானி பேர்ஸ்டோவ் , கேன் வில்லியம்சன், விராட் சிங், விஜய் சங்கர், அபிஷேக் சர்மா, கேதார் ஜாதவ், ரஷீத் கான், ஜெகதீச சுஜித், கலீல் அகமது, சித்தார்த் கவுல்.

டிசி: பிருத்வி ஷா, ஷிகர் தவான், ஸ்டீவ் ஸ்மித், ரிஷாப் பந்த், மார்கஸ் ஸ்டோய்னிஸ், சிம்ரன் ஹெட்மையர், அக்‌ஷர் பட்டேல், ரவிச்சந்திரன் அஸ்வின், ககிசோ ரபாடா, அமித் மிஸ்ரா, அவேஷ் கான்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை