ஆஃப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளரான ரஷித் கான் ஐபிஎல் உள்பட பல டி20 லீக் போட்டிகளில் விளையாடி வருகிறார். ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான், முகமது நபி போன்ற ஆஅப்கானிஸ்தான் பந்துவீச்சாளர்களுக்கு டி20 லீக் போட்டிகளில் அதிக வரவேற்பு உள்ளது. 

Advertisement

இந்நிலையில் ஆஃப்கானிஸ்தான் பேட்டர்களையும் டி20 லீக் போட்டிகளில் தேர்வு செய்யவேண்டும் என ரஷித் கான் கோரிக்கை விடுத்துள்ளார். 

Advertisement

இதுகுறித்து பேசிய ரஷித் கான், “டி20 லீக் போட்டிகளில் ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர்களை விடவும் ஆப்கானிஸ்தான் பேட்டர்கள் இடம்பெற்றால் கூடுதலாக மகிழ்வேன். உலகமெங்கிலும் நடைபெறும் போட்டிகளில் எங்கள் நாட்டுப் பந்துவீச்சாளர்கள் பலர் விளையாடி வருகிறார்கள். அதேபோல எங்களுடைய பேட்டர்களுக்கும் வாய்ப்பு கிடைக்கவேண்டும். 

அது அவர்களுடைய ஆட்டத்திறனை அதிகப்படுத்தும். ஆப்கானிஸ்தான் கிரிக்கெட்டுக்கும் அதனால் நல்லது நடக்கும். சிலர் பாகிஸ்தான் சூப்பர் லீகில் விளையாடியுள்ளார்கள். அவர்களுக்கு வாய்ப்பு கிடைத்தபோது அதை நன்குப் பயன்படுத்திக் கொண்டார்கள். 

அதேபோல ஆப்கானிஸ்தான் பேட்டர்களுக்கு டி20 லீக் போட்டிகளில் வாய்ப்பு கிடைத்தால் அவர்களுடைய திறமையை நிச்சயம் நிரூபிப்பார்கள். எங்களுடைய பேட்டர்கள் டி20 கிரிக்கெட்டில் அதிரடியாக ஆடக்கூடியவர்கள்” என்று தெரிவித்துள்ளார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News