தோனி நிச்சயம் இந்த வரிசையில் களமிறங்க வேண்டும் - காம்பீர்!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் இரண்டாவது பாதியில் தற்போது சிஎஸ்கே அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் அபார வெற்றி பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி சிஎஸ்கே அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்வதற்கும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
இந்த இரண்டு போட்டியிலுமே சென்னை அணியின் கேப்டன் தோனி ஆறாவது இடத்தில் இறங்கி 3 மற்றும் 11 ரன்களை குவித்துள்ளார். பெங்களூரு அணிக்கு எதிராக களமிறங்கிய தோனி 11 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்து சென்றிருருந்தார்.
இருப்பினும் தோனியிடம் பழைய அதிரடி ஆட்டம் இல்லை என்பது வெளிப்படையாகவே தெரிகிறது. இந்நிலையில் தற்போது தோனி எந்த இடத்தில் களம் இறங்கி விளையாட வேண்டும் என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான கம்பீர் தனது கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் “தோனி சென்னை அணிக்காக நம்பர் நான்காமிடத்தில் இறங்கினால் அது அணியின் ரன் குவிப்புக்கு நல்லது. ஏனெனில் சேசிங் செய்யும்போதும் சரி முதல் பேட்டிங்கிலும் சரி தோனி நான்காமிடத்தில் இறங்கும்போது சிறப்பாக இருக்கும். சிஎஸ்கே அணியானது ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற உடன் நிச்சயம் தோனி முன்கூட்டியே இறங்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
ஏற்கனவே தோனி 40 வயதை தொட்டுள்ளதால் நிச்சயம் கூடிய விரைவில் ஓய்வை அறிவிக்க வாய்ப்புள்ளதால் தோனியின் அதிரடியை காண ரசிகர்களும் ஆவலுடன் காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.