என்னுடைய முயற்சிகள் கவனிக்கப்படாமல் போவதாகவே உணர்கிறேன் - ஸ்ரேயாஸ் ஐயர்!

Updated: Tue, Mar 11 2025 20:11 IST
Image Source: Google

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனானது எதிர்வரும் மார்ச் 22 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. மேற்கொண்டு பிளே ஆஃப் போட்டிகள் மே 20 ஆம் தேதி முதல் தொடங்கும் நிலையில் தொடரின் இறுதிப்போட்டி மே 25 ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெறவுள்ளது.

முன்னதாக வீரர்கள் மெகா ஏலத்திற்கு முன்னதாக நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தங்களுடையே கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரை அணியில் இருந்து நீக்கியது. அதன்பின் நடைபெற்று முடிந்த ஐபிஎல் வீரர்கள் மெகா ஏலத்தில் பங்கேற்ற ஸ்ரேயாஸ் ஐயரை வாங்க பல்வேறு அணிகள் போட்டி போட்ட நிலையில், இறுதியாக பஞ்சாப் கிங்ஸ் அணியானது ரூ. 26.75 கோடிக்கு அவரை வாங்கியதுடன், அணியின் கேப்டனகாவும் நியமித்துள்ளது. 

இதனால் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் பஞ்சாப் கிங்ஸ் அணி சாதிக்குமா என்ற எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. இந்நிலையில் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் கடந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டதுடன், அணியை சாம்பியனாக்கியதற்கான எந்தவொரு அங்கிகாரம் மற்றும் தனக்கு கிடைக்க கவனம் ஏதும் கிடைக்கவில்லை என்று ஸ்ரேயாஸ் ஐயர் கூறியுள்ளது ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளது.

இதுகுறித்து பேசிய அவர், "ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்ற பிறகு, நான் விரும்பிய கவனத்தைப் பெறவில்லை என்பதை நான் தனிப்பட்ட முறையில் உணர்ந்தேன். ஆனால் நாளின் முடிவில், நீங்கள் நேர்மையுடன் இருக்கும் வரை மற்றும் யாரும் பார்க்காதபோது சரியான விஷயங்களைச் செய்து கொண்டே இருந்தால், அது மிகவும் முக்கியமானது, அதைத்தான் நான் செய்தேன. வனத்தைப் பற்றிப் பேசும்போது மரியாதையைப் பெறுவதுதான். களத்தில் நான் செய்யும் முயற்சிகளுக்குக் கிடைக்கும் மரியாதைதான். சில சமயங்களில் என்னுடைய முயற்சிகள் கவனிக்கப்படாமல் போவதாகவே உணர்கிறேன்” என்று கூறியுள்ளார். 

சமீபத்தில் நடந்து முடிவடைந்த சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது. மேலும் இத்தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்வதற்கு ஸ்ரேயாஸ் ஐயர் மிகமுக்கிய காரணமாகவும் அமைந்தார். இத்தொடரில் அவர் இந்திய அணிக்காக அழுத்தமான சூழ்நிலைகளில் முக்கியமான இன்னிங்ஸ்களை விளையாடியதுடன் அதிக ரன்கள் குவித்த வீரராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Also Read: Funding To Save Test Cricket

மேற்கொண்டு இந்தியாவில் நடைபெற்று வரும் உள்ளூர் கிரிக்கெட் தொடரில் மும்பை அணிக்காக விளையாடி வரும் ஸ்ரேயாஸ் ஐயர் ரஞ்சி கோப்பை தொடரிலும் சிறப்பாக செயல்பட்டு அந்த அணி சாம்பியன் பட்டம் வெல்ல காரணமாக அமைந்தர். மேற்கொண்டு சையத் முஷ்டாக் அலி, இரானி கோப்பை தொடர்களில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான மும்பை அணி சாம்பியன் பட்டத்தை வென்றதும் குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை