இலங்கையைச் சேர்ந்த 39 வயது சுழற்பந்து வீச்சாளர் தில்ருவன் பெரேரா. இவர் 2007 முதல் 2021 வரை இலங்கை அணிக்காக 43 டெஸ்டுகள், 13 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். டெஸ்டில் 161 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதில் 5 விக்கெட்டுகளை 8 முறை எடுத்துள்ளார். 

Advertisement

இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தில்ருவன் பெரேரா ஓய்வு பெற்றுள்ளதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. எனினும் உள்ளூர் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 

Advertisement

முன்னதாக 30 வயது இலங்கை வீரர் பனுகா ராஜபட்ச சமீபத்தில் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார். பிறகு, ஓய்வு அறிவிப்பைத் திரும்பப் பெற்றுக்கொண்டார். எனினும் ஆஸ்திரேலிய செல்லும் இலங்கை டி20 அணியில் அவர் பெயர் இடம்பெறவில்லை. 

அதேபோல 30 வயது இலங்கை வீரர் தனுஷ்கா குணதிலகா டெஸ்ட் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார். இதையடுத்து ஓய்வு பெறும் வீரர்கள் மூன்று மாதங்களுக்கு முன்பு தகவல் அளிக்க வேண்டும் என இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. தற்போது, தில்ருவன் பெரேராவின் ஓய்வு குறித்த தகவலை இலங்கை கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News