இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் இலங்கை அணியானது மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து அணி இரண்டிலும் வெற்றிபெற்றதுடன் 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் இன்று நடைபெறவுள்ளது.

Advertisement

இந்த போட்டியிலும், இங்கிலாந்து அணி வெற்றிபெறும் பட்சத்தில் தொடரை முழுமையாக கைப்பற்றும் என்பதாலும், இலங்கை அணி வெற்றி பெற்று ஆறுதலை தேட முயற்சிக்கும் என்பதாலும் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. இதனால் இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றன. முன்னதாக இப்போட்டியில் விளையாடும் இங்கிலாந்து, இலங்கை அணிகளின் பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டிருந்தது. 

Advertisement

இந்நிலையில் இப்போட்டிக்கான இலங்கை அணியில் இடம்பிடித்துள்ள முன்னாள் கேப்டன் திமுத் கருணரத்னே சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டும் வாய்ப்பை பெற்றுள்ளார். அந்தவகையில் கருணரத்னே இப்போட்டியில் 7 ரன்களை எடுக்கும் பட்சத்தில், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 7000 ரன்களை எட்டவுள்ளார். மேலும் இந்த சாதனையை படைக்கும் நான்காவது இலங்கை வீரர் எனும் பெருமையையும் அவர் பெறுவார். 

இதற்கு முன்னதாக இலங்கை ஜாம்பவான்கள் குமார் சங்கக்காரா, மஹெலா ஜெயவர்த்னே, ஏஞ்சலோ மேத்யூஸ் ஆகியோர் மட்டுமே இந்த மைல் கல்லை எட்டியுள்ளனர். இதுவரை இலங்கை அணிக்காக இதுவரை 93 டெஸ்டில் 178 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள திமுத் கருணர்த்னே 40.87 சராசரியில் 6,990 ரன்களை எடுத்துள்ளார். அதில், 16 சதங்கள் மற்றும் 38 அரைசதங்களையும் விளாசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இலங்கை பிளேயிங் லெவன்: திமுத் கருணாரத்ன, பதும் நிஷங்கா,குசல் மெண்டிஸ், ஏஞ்சலோ மேத்யூஸ், தினேஷ் சந்திமால், தனஞ்சய டி சில்வா (கே), கமிந்து மெண்டிஸ், விஸ்வா ஃபெர்னாண்டோ, அசித்த ஃபெர்னாண்டோ, லஹிரு குமாரா, மிலன் ரத்நாயக்க

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

இங்கிலாந்து பிளேயிங் லெவன்: டேன் லாரன்ஸ், பென் டக்கெட், ஒல்லி போப் (கே) ஜோ ரூட், ஹாரி புரூக் , ஜேமி ஸ்மித், கிறிஸ் வோக்ஸ், கஸ் அட்கின்சன், ஜோஷ் ஹல், ஒல்லி ஸ்டோன், சோயிப் பஷீர்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News