இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் ஒன்றான விஜய் ஹசாரே ஒருநாள் கோப்பை தொடரின் நடப்பு சீசன் டிசம்பர் 8ஆம் தேதிமுதல் ஆரம்பமாகுகிறது. இதற்காக அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றன.

Advertisement

இந்நிலையில் இத்தொடருக்கான தமிழ்நாடு அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் சையது முஷ்டாக் அலி கோப்பையின் போது தமிழ்நாடு அணியை வழிநடத்திய கேப்டன் விஜய் சங்கர், விஜய் ஹசாரே கோப்பையிலும் அணிக்குக் கேப்டனாக நீட்டிக்கப்பட்டுள்ளார்.

Advertisement

மேலும் கை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக இங்கிலாந்து டெஸ்ட் தொடர், ஐபிஎல் தொடர், சையத் முஷ்டாக் அலி ஆகிய தொடர்களில் விளையாடமல் இருந்த வாஷிங்டன் சுந்தர் இந்த அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரில் விளையாடமல் இருந்த தினேஷ் கார்த்திக்கும் இத்தொடரில் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார்.

அதேசமயம், காயத்தில் நீண்ட நாட்கள் விளையாடாமல் இருந்து, தமிழக அணியில் சையது முஷ்டாக் அலி கோப்பையில் விளையாடிய இடதுகை வேகப்பந்துவீச்சாளர் நடராஜன், விஜய் ஹசாரே கோப்பைக்கான தமிழ்நாடு அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

தமிழக வீரர் பாபா அபராஜித் தற்போது தென் ஆப்பிரிக்க சென்றுள்ள இந்திய ஏ அணியில் இடம் பெற்றுள்ளார். அவர் தமிழக அணிக்கு வருகை இன்னும் உறுதியாகவில்லை ஆதலால்,அவரின் சகோதரர் பாபா இந்திரஜித் சேர்க்கப்பட்டுள்ளார்.

விஜய் ஹசாரே கோப்பையில் எலைட் பி பிரிவில் இடம்பெற்றுள்ள தமிழ்நாடு அணியுடன் மும்பை, புதுச்சேரி, பரோடா, பெங்கால், கர்நாடக அணிகள் இடம் பெற்றுள்ளன.

Advertisement

தமிழ்நாடு அணி: விஜய் சங்கர்(கேப்டன்), என் ஜெகதீசன், தினேஷ் கார்த்திக், ஹரி நிசாந்த், ஷாருக் கான், ஷாய் கிஷோர், முருகன் அஸ்வின், சந்தீப் வாரியர், வாஷிங்டன் சுந்தர், எம் சித்தார்த், சாய் சுதர்ஸன், கங்கா ஸ்ரீதர் ராஜூ, எம். முகமது, ஜே.கவுசிக், பி.சரவணகுமார், எல். சூர்யபிரகாஷ், பாபா இந்திரஜித், ஆர் சஞ்சய் யாதவ், எம் கவுசிக் காந்தி, ஆர் சிலம்பரசன்

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News