இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகின்றன. இந்தூரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா 163 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி உள்ளது. இதன் மூலம் இந்தப் போட்டியில் 76 ரன்கள் எடுத்தால் ஆஸ்திரேலியா வெற்றி பெறும். முதல் இன்னிங்ஸில் ஆஸி. 88 ரன்கள் முன்னிலை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement

இரண்டாவது இன்னிங்ஸில் புஜாரா, 142 பந்துகளை எதிர்கொண்டு 59 ரன்கள் எடுத்து அவுட்டானார். இதில் 5 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸர் அடங்கும். அவருடன் ஏதேனும் ஒரு இந்தியா பேட்ஸ்மேன் களத்தில் கொஞ்சம் நிலைத்து நின்று ஆடி இருந்தால் ஆஸ்திரேலிய அணிக்கான இலக்கு கூடி இருக்கும். துரதிர்ஷ்டவசமாக அது நடக்காமல் போனது. 

Advertisement

இந்நிலையில் இதுகுறித்து பேசிய சட்டேஷ்வர் புஜாரா, “இந்த ஆடுகளத்தில் பேட்டிங் செய்வது மிகவும் கடினமாக உள்ளது. தடுப்பாட்டத்தை நம்ப வேண்டும். பேட்ஸ்மேன்கள் பந்தின் லெந்த்தை முன்கூட்டியே கணிக்க வேண்டியுள்ளது. மேலும், அட்டாக் மற்றும் டிபென்ஸ் என இரண்டையும் பேலன்ஸ் செய்ய வேண்டும். விரைந்து ரன் சேர்க்க வேண்டி பிரத்யேகமாக சில ஷாட்களை பயிற்சி செய்து வருகிறேன். 

அதில் ஒன்றுதான் நான் சிக்ஸர் அடித்த அந்த ஷாட். இருந்தும் நான் அவுட் ஆனதில் ஏமாற்றம்தான். அக்சர் உடன் கூட்டணி அமைந்து வரும் நேரம் பார்த்து விக்கெட்டை இழந்தேன். வெற்றி பெற இந்த ரன்கள் போதாது என நான் அறிவேன். ஆனாலும் ஒரு சான்ஸ் பார்க்கலாம்” என தெரிவித்துள்ளார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News