டிஎன்பிஎல் 2021 : பிளே ஆஃப் வாய்ப்பை இழந்த சேலம் ஸ்பார்டன்ஸ்!
டிஎன்பிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 23ஆவது லீக் ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்ஸ் - நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற சேலம் ஸ்பார்டன்ஸ் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து விளையாடியது.
அதன்படி 20 ஓவர்கள் முடிவில் சேலம் ஸ்பார்டன்ஸ் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 120 ரன்களை மட்டுமே எடுத்தது. இதில் அதிகபட்சமாக விஜய் சங்கர் 41 ரன்களைச் சேர்த்தார்.
இதையடுத்து எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய நெல்லை அணிக்கு கேப்டன் அபாரஜித் - ரஞ்சன் பால் இணை சிறப்பான தொடக்கத்தை அமைத்தது. பின் 38 ரன்களில் அபாரஜித் ஆட்டமிழந்து வெளியேறினார்.
பொன்னர் ரஞ்சன் பாலுடன் இணைந்த சஞ்சய் யாதவ் அதிரடியாக விளையாடி அணியை வெற்றிப்பதாக்கு அழைத்து சென்றார்.
இதன் மூலம் நெல்லை ராயல் கிங்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் சேலம் ஸ்பார்டன்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இத்தோல்வியின் மூலம் நடப்பு சீசன் டிஎன்பிஎல் தொடரில் சேலம் ஸ்பார்டன்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பையும் இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.