வித்தியாசமாக விக்கெட்டை இழந்த ராகுல்; விமர்சிக்கும் ரசிகர்கள்!
ஆஸ்திரேலியா ஏ மற்றும் இந்திய ஏ அணிகளுக்கு இடையேயான இரண்டாவது அதிகாரப்பூர்மற்ற டெஸ்ட் போட்டியானது நேற்று மெல்போர்னில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய ஏ அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணியில் ந்ட்சத்திர வீரர்கள் அபிமன்யூ ஈஸ்வரான், கேஎல் ராகுல், சாய் சுதர்ஷன், ருதுராஜ் கெய்க்வாட் என அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர்.
இருப்பினும் மறுபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய துருவ் ஜூரெல் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். பின்னர் இப்போட்டியில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட துருவ் ஜூரெல் 6 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 80 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். இதனால் இந்திய ஏ அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 161 ரன்களுக்கே ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய ஏ அணி தரப்பில் மைக்கேல் நேசர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த ஆஸ்திரேலிய ஏ அணியில் மார்க்கஸ் ஹாரிஸ் அரைசதம் கடந்து அசத்திய நிலையில் மற்ற வீரர்கள் யாரும் பெரிதளவில் சோபிக்க தவறியதால் அந்த அணி, 223 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக மார்கஸ் ஹாரிஸ் 74 ரன்களையும், ரோக்கிசியோலி 35 ரன்களையும், பெர்சன் 30 ரன்களையும் சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் பிரஷித் கிருஷ்ணா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனைத்தொடர்ந்து 62 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய ஏ அணியில் அபிமன்யூ ஈஸ்வர்ன் 17, சாய் சுதர்ஷன் 3,கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 11, கேஎல் ராகுல் 10 ரன்னிலும், தேவ்தத் படிக்கல் ஒரு ரன்னிலும் என விக்கெட்டை இழந்த நிலையில், இந்திய ஏ அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 73 ரன்களை மட்டுமே எடுத்தது. இதில் துருவ் ஜூரெல் 19 ரன்களுடனும், நிதீஷ் ரெட்டி 9 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
Also Read: Funding To Save Test Cricket
இந்நிலையில் இந்த இன்னிங்ஸில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேஎல் ராகுல் ஆட்டமிழந்த விதம் ரசிகர்களை கோமடைய செய்துள்ளது. அதன்படி ரோக்கிசியோலி வீசிய ஓவரை எதிர்கொண்ட கேஎல் ராகுல் குறிப்பிட்ட பந்தை தடுத்து விளையாடும் முனைப்பில் அதனை தனது பேடால் தடுத்தார். ஆனால் பந்து அவரின் கால்களுக்கு இடையில் கடந்து சென்று ஸ்டம்ப்களை தாக்கியது. இதனால் கேஎல் ராகுல் 10 ரன்களை மட்டுமே எடுத்த கையோடு நடையைக் கட்டினார். இந்நிலையில் அவர் ஆட்டமிழந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.