ரோஹித் - கில் தொடக்க வீரர்களாக விளையாடக் கூடாது - ரவி சாஸ்திரி!

Updated: Wed, Jun 28 2023 20:55 IST
Image Source: Google

இந்தியாவில் வரும் அக்டோபர் - நவம்பர் மாதங்களில் நடக்க இருக்கும் ஒருநாள் உலகக்கோப்பைக்கான அட்டவணை பட்டியல் வெளியிடப்பட்டதிலிருந்து, உலகக்கோப்பை குறித்தான பேச்சுகள் மிக அதிகமாக இருக்கின்றன. இந்தியாவில் இந்தமுறை உலகக்கோப்பை நடைபெற இருப்பதால் இந்திய அணிக்கு மற்ற எந்தமுறையும் இல்லாததை விட கூடுதல் அழுத்தமும், நெருக்கடியும் உண்டாகி இருக்கிறது.

மேலும் இந்திய அணி 2011 ஆம் ஆண்டு இந்தியாவில் நடந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பைக்கு பிறகு, வேறு எந்த வடிவத்திலும் உலகக்கோப்பையை கைப்பற்றாத காரணத்தினால், இந்த அழுத்தமும் நெருக்கடியும் அப்படியே இரண்டு மடங்காக மாறுகிறது. தற்பொழுது இந்திய அணியின் முன்னாள் வீரரும், இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி மிக முக்கியமான கருத்து ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

இதுகுறித்து பேசிய அவர், “ரோஹித் சர்மா - ஷுப்மன் கில் துவக்க வீரர்களாக விளையாடக் கூடாது. நீங்கள் மொத்த நிகழ்வையும் கொஞ்சம் அலசி பார்த்தால் புரியும். இந்த இடத்தில் பேட்டிங் ஃபார்ம் என்பது மிகவும் முக்கியமான விஷயம். மேல் வரிசையில் ஒரு இடது கை பேட்ஸ்மேன் வேண்டும் என்பது என்னுடைய கருத்து கிடையாது. ஆனால் முதல் ஆறு பேட்ஸ்மேன்களில் குறைந்தது இரண்டு இடது கை பேட்ஸ்மேன்கள் இருக்க வேண்டும்.

இந்திய அணி எப்போதெல்லாம் மிகச் சிறப்பாக செயல்பட்டது என்று பார்த்தால் 2011 உலகக் கோப்பையில் இடதுகை வீரர்கள் யுவராஜ் சிங் மற்றும் சுரேஷ் ரெய்னா இருந்தார்கள். அதேபோல் 1974 உலகக் கோப்பைக்கு போனால் கல்லிச்சரன், கிளைவ் லாயிட், பிரெட்ரிக்ஸ் ஆகியோர் இருந்தார்கள்.

1979 மற்றும் 1983 உலக கோப்பைகளில் மட்டும் இடதுகை ஆட்டக்காரர்கள் பெரிதாக இல்லை. இந்த இரண்டு உலகக்கோப்பை தொடர்களுமே வித்தியாசமானதாகத்தான் இருந்தது. அப்படியே 1996 உலகக்கோப்பைக்கு வந்தால் சனத் ஜெயசூர்யா, அர்ஜுனர் அனுப்புங்க மற்றும் குருசின்ஹ இருந்தார்கள் . அடுத்து ஆஸ்திரேலியாவில் மேத்யூ ஹைடன் மற்றும் ஆடம் கில்கிரிஸ்ட் ஆகியோர் இருந்தார்கள்” என்று கூறியுள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை