கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு இந்த சீசனில் மிகப்பெரிய திருப்புமுனையாக இருந்து வருபவர் பினிஷிங் ரோலில் விளையாடும் ரிங்கு சிங். வரிசையாக தோல்விகளை சந்தித்து புள்ளி பட்டியலில் கடைசியில் இருந்து வந்த கொல்கத்தா அணி, அதன் பின்னர் வெற்றி பாதைக்கு திரும்பி அடுத்தடுத்து வெற்றிகளை பெற்று இப்போது 11 போட்டிகளில் 10 புள்ளிகள் உடன் ஆறாவது இடத்தில் இருக்கிறது.

Advertisement

இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இதில் வெற்றி பெற்றால் முதல் நான்கு இடங்களுக்குள் முன்னேறும் வாய்ப்பும் இருக்கிறது. கடந்த காலங்களில் கொல்கத்தா அணிக்கு பினிஷிங் ரோலில் விளையாடி வந்த ஆண்ட்ரே ரஸல் இந்த சீசனில் தொடர்ச்சியாக சொதப்பி வந்தபோதும், பெரிதளவில் பாதிப்பு இல்லாமல் நன்றாக ஃபினிஷ் செய்ய முடிந்ததற்கு காரணம் ரிங்கு சிங்.

Advertisement

இவர் குஜராத் அணிக்கு எதிராக 5 சிக்ஸர்களை கடைசி ஓவரில் அடித்து வெற்றி பெற்று கொடுத்தார். பஞ்சாப் அணிக்கு எதிராக கடைசியில் பௌண்டரி அடித்து வெற்றி பெற்று கொடுத்தார். அதுபோன்று ஹைதராபாத் அணிக்கு எதிராக தடுமாறி வந்தபோது களமிறங்கி 46 ரன்களை முக்கியமான கட்டத்தில் அடித்து நல்ல ஸ்கொரை எட்டுவதற்கு உதவினார். இப்படி கீழ் வரிசையில் கொல்கத்தா அணியின் தூணாக திகழ்ந்து வரும் ரிங்கு சிங், இந்திய அணிக்கு அடுத்த பினிஷர் ஆக வருவார் என்றும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

ஐபிஎல் கிரிக்கெட்டில் சிறந்த பினிஷராக உருவெடுத்து வரும் ரிங்கு சிங், கிரிக்கெட் வரலாற்றில் தலைசிறந்த ஃபினிஷர் ஆக இருந்து வரும் மகேந்திர சிங் தோனியிடம் பேசியபோது அவர் சில அட்வைஸ் கொடுத்ததாகவும் அதை இதற்கு முன்னர் எவரிடமும் கற்றுக் கொள்ளவில்லை. இனி என் வாழ்வில் மறக்கவே முடியாது என்றும் பேசியுள்ளார் ரிங்கு சிங். 

இதுகுறித்து பேசிய ரிங்கு சிங், “கிரிக்கெட்டில் பெஸ்ட் ஃபினிஷர் என்றால் அது மாஹி பாய் மட்டுமே. அவரைப் பார்த்து தான் நான் வளர்ந்திருக்கிறேன். இப்போது நான் பினிஷிங் ரோலில் விளையாடி வருவதால் நான் என்ன செய்ய வேண்டும் இன்று அவரிடம் கேட்டேன். அப்போது, ‘உனது திட்டத்தை மிகவும் எளிமையாக வைத்துக்கொள். எந்த பந்தை வீசவேண்டும் என்பதை பவுலர் பார்த்துக் கொள்வார். நீ எதைப் பற்றியும் யோசிக்காதே. பந்து எப்படி வருகிறது என்பதில் முழு கவனம் செலுத்தி எதிர்கொள். உனக்கு எந்த பக்கம் ஆடினால் சிறப்பாக இருக்கும் என்று தோன்றுகிறதோ அதை செய். பல நேரங்களில் எடுபடும். சில நேரங்களில் தவறும் அதைப்பற்றி கவலைப்படாதே. அடுத்த போட்டியை பற்றி யோசிக்க சென்றுவிடு” என்றார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News