டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் ஷிகர் தவான், ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் ஆகிய முக்கியமான வீரர்கள் இடம்பெறவில்லை. ஆனால் இவர்கள் மூவரும் ஐபிஎல் 14வது சீசனின் 2ஆம் பாகத்தில் அருமையாக ஆடிவருகின்றனர்.

Advertisement

ஆனால் அதேவேளையில், டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ராகுல் சாஹர் ஆகிய 3 மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்களும் சரியான ஃபார்மில் இல்லாமல் திணறிவருகின்றனர். எனவே ஐபிஎல் பெர்ஃபாமன்ஸை வைத்து, டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் சில மாற்றங்களை செய்யலாம் என சிலர் பேசுகின்றனர்.

Advertisement

இந்நிலையில், இதுகுறித்து பேசியுள்ள அஜித் அகர்கர், “டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது. காயம் காரணமன்றி மாற்றம் எதுவும் செய்யக்கூடாது. டி20 உலக கோப்பைக்கான அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் சரியான ஃபார்மில் இல்லை. அவர்களது சிறந்த ஆட்டத்தை ஐபிஎல்லில் வெளிப்படுத்தவில்லை.  ஆனால் ஃபார்முக்கு திரும்பி தன்னம்பிக்கையை பெற ஒரேயொரு இன்னிங்ஸ் போதும். 

ஐபிஎல் முடிவில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். இந்த 15 வீரர்கள் தான் சிறந்த வீரர்கள் என்று நினைத்து அணியில் எடுத்தால், அவர்கள் மீது வைத்த நம்பிக்கையை கைவிடாமல், அவர்கள் மீது தொடர்ந்து நம்பிக்கை வைத்து அவர்களையே ஆடவைக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News