SL vs BAN, 2nd Test: இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் வங்கதேச அணி வீரர்கள் வலுவான மன உறுதியுடன் உள்ளதாக அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் பில் சிம்மன்ஸ் கூறியுள்ளார். 

Advertisement

இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து வரும் வங்கதேச அணி தற்சமயம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது டிராவில் முடிவடைந்துள்ளது. இதையடுத்து இலங்கை - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை (ஜூன் 25) நடைபெறவுள்ளது. இப்போட்டியானது கொழும்புவில் உள்ள சிங்கள ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

Advertisement

இத்தொடரின் முதல் போட்டியானது டிராவில் முடிவடைந்துள்ள நிலையில், இப்போட்டியில் வெற்றிபெறும் அணி தொடரை வெல்லும் வாய்ப்பை பெறும். இதன் காரணமாக இந்த போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக இப்போட்டியில் வெற்ற் பெறும் முனைப்பில் இரு அணியின் வீரர்களும் தீரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக வங்கதேச அணி பயிற்சியாளர் சிம்மன்ஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “தொடரின் முதல் போட்டியில் நாங்கள் விளையாடிய விதத்தில் நிறைய நம்பிக்கை இருக்கிறது. பெரும்பாலும், ஒரு தொடரின் முதல் டெஸ்டில் நாங்கள் சற்று மெதுவாகத்தான் தொடங்குவோம், ஆனால் இந்த முறை, நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தோம். அது தற்போது இரண்டாவது டெஸ்டில் எங்களுக்கு நிறைய நம்பிக்கையைத் தருகிறது. தொடரின் ஆரம்பத்திலிருந்தே மன உறுதியுடன் செயல்படுவது சிறப்பாக இருந்தது.

டாக்காவில் வீரர்கள் தங்கள் பணியைச் செய்தார்கள், அதனால் நாங்கள் இங்கே சிறப்பாக செயல்பட முடிந்தது. காலேயில் எங்களுக்கு சிறந்த முடிவாக இருந்தது, அதன் பிறகு மூன்று நாட்களில் நாங்கள் நன்றாக மீண்டு வந்துள்ளோம். அணி வீரர்கள் உற்சாகம் அதிகமாக உள்ளது. இப்போட்டி நடைபெறும் விக்கெட்டும் சிறப்பாக உள்ளது நன நினைக்கிறேன். அதனால் முதல் போட்டியைப் போன்றே இந்த போட்டியிலும் சிறப்பாக செயல்படுவோம். 

Also Read: LIVE Cricket Score

Advertisement

நாம மேம்படுத்த வேண்டிய சில விஷயங்களும் உள்ளன, ஆதனால் முதல் டெஸ்டில் காட்டிய நிலையைத் தக்கவைத்துக்கொள்வது அல்லது உயர்த்துவது மிக முக்கியம். வீரர்கள் சிறப்பாக செயல்படுகிறார்கள். நல்ல கிரிக்கெட் விளையாடுவது மனநிலையை உயர்த்துகிறது, மேலும் டெஸ்ட் போட்டிகளுக்கு இடையில் எங்களுக்கு நல்ல இடைவெளி கிடைத்துள்ளது. அவர்கள் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் தயாராக உள்ளனர். நாங்கள் சவாலுக்கு தயாராக இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News