பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணியானது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கும் இடையே நடந்து முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணியானது 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது ஆகஸ்ட் 30ஆம் தேதி ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருந்தது. ஆனால் தொடர் மழை காரணமாக இப்போட்டியின் முதல் நாள் ஆட்டமானது முழுவதுமாக கைவிடப்பட்டது. 

Advertisement

இதையடுத்து இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்கதேச அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்து பாகிஸ்தான் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணியானது முதல் இன்னிங்ஸில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 274 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக சைம் அயூப் 58 ரன்களையும், கேப்டன் ஷான் மசூத் 57 ரன்களையும் அகா சல்மான் 54 ரன்களையும் சேர்த்ததைத் தவிர்த்து மற்ற வீரர்கள் சொர்ற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். வங்கதேச அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய மெஹிதி ஹசன் மிராஸ் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

Advertisement

இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய வங்கதேச அணிக்கு ஷாத்மான் இஸ்லாம் - ஜகிர் ஹசன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதன்மூலம் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேச அணியானது விக்கெட் இழப்பின்றி 10 ரன்களை எடுத்திருந்தது. இதனையடுத்து இன்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தை ஷாத்மன் இஸ்லாம் 6 ரன்களுடனும், ஜகிர் ஹசன் ரன்கள் ஏதுமின்றியும் தொடர்ந்தனர்.  இதில் ஜகிர் ஹசன் ஒரு ரன்னிலும், ஷாத்மான் இஸ்லாம் 10 ரன்களுக்கும் என ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் நஜ்முல் ஹொசைன் சனடோ 4 ரன்களிலும், மொமினுல் ஹக் ஒரு ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர்.

மேலும், கடந்த போட்டியில் சதமடித்து ஆட்டநாயகன் விருதை வென்ர முஷ்ஃபிக்கூர் ரஹிம் 3 ரன்களிலும், ஷாகிப் அல் ஹசன் 2 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.  இதனால் வங்கதேச அணியானது 26 ரன்களிலேயே 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் இணைந்த லிட்டன் தாஸ் மற்றும் மெஹிதி ஹசன் இணை பொறுப்புடன் விளையாடி விக்கெட் இழப்பை தடுத்ததுடன் அணியின் ஸ்கோரையும் உயர்த்தினர். பின்னர் தொடர்ந்து அபாரமாக விளையாடிய இருவரும் தங்கள் அரைசதங்களைப் பதிவுசெய்து அசத்தினர். 

அதன்பின் 12 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 78 ரன்களை எடுத்த நிலையில் மெஹிதி ஹசன் தனது விக்கெட்டை இழக்க, மறுபக்கம் தொடர்ந்து அபாரமாக விளையாடி வந்த லிட்டன் தான் சதமடித்து அசத்தினார். ஆனால் மறுமுனையில் விளையாடிய தஸ்கின் அஹ்மத் ஒரு ரன்னில் ஆட்டமிழந்த நிலையில், 13 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 138 ரன்களைச் சேர்த்த நிலையில் லிட்டன் தாஸும் தனது விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய நாஹித் ரானாவும் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, வங்கதேச அணியானது 262 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

பாகிஸ்தான் தரப்பில் குர்ராம் ஷஸாத் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனையடுத்து 12 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த பாகிஸ்தான் அணியில் அப்துல்லா ஷஃபிக், குர்ராம் ஷஸாத் ஆகியோர் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் பாகிஸ்தான் அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 9 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது. இதில் சைம் அயுப் 6 ரன்களுடன் களத்தில் உள்ளார். வங்கதேச அணி தரப்பில் ஹசன் மஹ்முத் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News