இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ட்ரெண்ட்பிரிட்ஜில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 183 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து முதல் இன்னிங்ஸை நிறைவுசெய்தது. 

Advertisement

அதில் அதிகபட்சமாக இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் 64 ரன்களைச் சேர்த்தார். இந்திய அணி தரப்பில் பும்ரா 4 விக்கெட்டுகளையும், முகமது ஷமி 3 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.

Advertisement

இதையடுத்து கடைசி 13 ஓவர்கள் மீதமிருந்த நிலையில் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணிக்கு ராகுல் - ரோஹித் இணை நிதானமான தொடக்கத்தைக் கொடுத்தது. இதனால் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 21 ரன்களை எடுத்திருந்தது. 

இதையடுத்து ரோஹித் சர்மா - கே.எல்.ராகுல் இருவரும் தலா 9 ரன்களுடன் இரண்டாம் நாள் ஆட்டத்தை  இன்று தொடங்கினர். தொடர்ந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் எதிரணி பந்துவீச்சை சமாளித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 

பின்னர் ரோஹித் சர்மா 36 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஒல்லி ராபின்சன் பந்துவீச்சில் சாம் கரணிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தர். அவரது விக்கெட்டுடன் உணவு இடைவேளையும் எடுக்கப்பட்டது. 

இதன்மூலம் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 97 ரன்களை எடுத்தது. இதில் கே.எல்.ராகுல் 48 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News