ENG vs IND, 3rd Test Day 3: விஷ்வரூபமெடுத்த புஜாரா; வலுவான நிலையை நோக்கி இந்தியா!

Updated: Fri, Aug 27 2021 23:04 IST
Image Source: Google

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 25ஆம் தேதி தொடங்கி தற்போது 3ஆவது நாளாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் முதல் இரண்டு போட்டிகளின் முடிவில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்க இந்த மூன்றாவது போட்டியில் இந்திய அணி பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. 

இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சின் முடிவில் 78 ரன்களை மட்டுமே குவித்தது. அதனை தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி ஆனது 432 ரன்களை குவித்தது. இதன் காரணமாக இந்திய அணியை விட இங்கிலாந்து 354 ரன்கள் முன்னிலை பெற்று உள்ளதால் இந்திய அணி பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது. 

அதன்படி தற்போது 354 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்சை விளையாடிய இந்திய அணிக்கு ராகுல் 8 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறி ஏமாற்றமளித்தார். அதன்பிறகு ரோகித் சர்மா புஜாராவுடன் இணைந்து சிறப்பான பாட்னர்ஷிப் அமைத்தார். 

தொடர்ந்து அதிரடியாக விளையடிவந்த இந்த இணை அரைசதம் கடந்தது. பின் 59 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரோஹித் சர்மா ஆட்டமிழந்து வெளியேறினார். இதையடுத்து களமிறங்கிய கேப்டன் விராட் கோலி, புஜாராவுடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். 

இதன் மூலம் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 215 ரன்களைச் சேர்த்துள்ளது. இந்திய அணி தரப்பில் புஜாரா 91 ரன்களுடனும், விராட் கோலி 45 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 

Also Read: சிட்னி சிக்சர்ஸில் மீண்டும் ஓராண்டு ஒப்பந்தமான பிராத்வைட்!

இங்கிலாந்து அணி தரப்பில் ராபின்சன், ஓவர்டன் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றியுள்ளனர். இதன் மூலம் 139 ரன்கள் பின் தங்கிய நிலையில் இந்திய அணி நாளை நான்காம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை