ENG vs IND, 3rd Test Day 1: ஹமீத், பர்ன்ஸ் அதிரடி; விக்கெட் எடுக்க திணறும் இந்தியா!
இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 3ஆவது டெஸ்ட் போட்டி இன்று லீட்ஸில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 40.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 78 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில் கேஎல் ராகுல், பும்ரா, சமி ஆகியோர் டக் அவுட்டில் வெளியேறினார். அதிகபட்சமாக ரோகித் சர்மா 105 பந்துகளை சந்தித்து 19 ரன்களை எடுத்தார்.
இங்கிலாந்து தரப்பில் ஆண்டர்சன், ஓவர்டேன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் ஒல்லி ராபின்சன், சாம் கரன் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் ஹாசீப் ஹமீத் - ரோரி பர்ன்ஸ் வழக்கத்திற்கு மாறாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, அணியை முன்னிலைப் படுத்தினர்.
இதனால் இந்திய அணி பந்துவீச்சாளர்கள் விக்கெட் எடுக்க முடியாமல் தடுமாறினர். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ஹாசீப் ஹமீத் அரைசதமடிக்க, அவரைத்தொடர்ந்து சிறிது நேரத்திலேயே ரோரி பர்ன்ஸும் அரைசதத்தைக் கடந்தார்.
இதனால் முதல்நாள் ஆட்டந்நேர முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 120 ரன்களைச் சேர்த்தது. அந்த அணியில் ஹாசீப் ஹமீத் 60 ரன்களுடனும், ரோரி பர்ன்ஸ் 52 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
Also Read: : சிட்னி சிக்சர்ஸில் மீண்டும் ஓராண்டு ஒப்பந்தமான பிராத்வைட்!
இதன் மூலம் 42 ரன்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து அணி நாளை இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.