இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3ஆவது டெஸ்ட் லீட்ஸ் ஹெட்டிங்லே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் ஆடிய இந்திய அணி, முதல் இன்னிங்சில் 78 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து தரப்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன், கிரேக் ஓவர்டான் 3 விக்கெட்டும் ராபின்சன், சாம் கரன் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

Advertisement

அதன்பின், முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து வீரர்கள், இந்திய பந்துவீச்சை துவம்சம் செய்து ரன் குவித்தனர். 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில,  8 விக்கெட் இழப்புக்கு 423 ரன்கள் எடுத்திருந்தது. இதில் கேப்டன் ஜோ ரூட் சதமடித்து அசத்தினார்.

Advertisement

இதையடுத்து இன்று மூன்றாம் நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி 432 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் முகமது ஷமி 4 விக்கெட்டுகளையும், பும்ரா, சிராஜ், ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் எடுத்தனர்.

இதையடுத்து, 355 ரன்கள் எடுத்தால் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க முடியும் என்ற இமாலய இலக்குடன், இந்தியா தனது 2ஆவது இன்னிங்ஸில் களமிறங்கியுள்ளது. அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களான ரோஹித் சர்மா - கே.எல்.ராகுல் இணை நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

பின் 8 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஓவர்டன் பந்துவீச்சில் கே.எல்.ராகுல் ஆட்டமிழந்தார். அதன்பின் ரோஹித்துடன் ஜோடி சேர்ந்த புஜாரா தன்மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு பதிலடியைக் கொடுக்கும் வகையில் விளையாடினார். 

மறுமுனையில் ரோஹித் அரைசதம் அடித்து அசத்த, புஜாரா பவுண்டரிகளை விளாசினார். இதனால் மூன்றாம் நாள் தேநீர் இடைவேளையின் போது இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 112 ரன்களை சேர்த்தது. 

Advertisement

இதில் ரோஹித் சர்மா 59 ரன்களுடனும், புஜாரா 40 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News