ENG vs IND, 4th test: அரைசதத்தை நழுவவிட்ட ராகுல்; நம்பிக்கை தரும் ரோஹித்!
இந்தியா - இங்கிலாந்து இடையே ஓவலில் நடந்துவரும் 4வது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 191 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணியில் விராட் கோலி, ஷர்துல் தாக்கூர் ஆகியோர் மட்டுமே அரைசதம் அடித்தனர்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி, தொடக்க வீரர்கள் ரோரி பர்ன்ஸ்(5), ஹசீப் ஹமீத்(0) ஆகிய இருவரது விக்கெட்டுகளையும் ஆரம்பத்திலேயே இழந்தது. அதன்பின் போப் - மொயின் அலி ஜோடியின் சிறப்பான பேட்டிங்கால் இங்கிலாந்து அணியின் ஸ்கோர் உயர்ந்தது. பின் ஒல்லி போப் 81 ரன்னிலும் மொயின் 35 ரன்னிலும் ஆட்டமிழக்க 255 ரன்களுக்கு 9 விக்கெட் விழுந்தது.
கடைசி விக்கெட்டுக்கு கிறிஸ் வோக்ஸுடன் ஆண்டர்சன் ஜோடி சேர, ஆண்டர்சனை முடிந்தவரை மறுமுனையில் நிறுத்திவிட்டு, அதிரடியாக அடித்து ஆடிய கிறிஸ் வோக்ஸ் பவுண்டரிகளை விளாசி மளமளவென ஸ்கோரை உயர்த்தி அரைசதம் அடித்தார். 84வது ஓவரின் கடைசி பந்தில் சிங்கிள் எடுத்து, அடுத்த ஓவரில் ஸ்டிரைக்கை தக்கவைப்பதற்காக ரன் ஓடும்போது ரன் அவுட்டானார் கிறிஸ் வோக்ஸ்.
இதனால் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 290 ரன்களை குவித்து, 99 ரன்கள் முன்னிலை பெற்றது இங்கிலாந்து அணி. அதன்பின் 99 ரன்கள் பின் தங்கிய 2ஆவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணிக்கு ரோஹித் சர்மா - கே.எல்.ராகுல் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இதனால் 2ஆம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 43 ரன்களைச் சேர்த்தது. அதன்பின் இன்று தொடங்கிய மூன்றாம் நால் ஆட்டத்தில் கே.எல்.ராகுல் 20 ரன்களுடனும், ரோஹித் சர்மா 22 ரன்களுடனும் களமிறங்கினர்.
இதில் தொடக்க முதலே அதிரடியாக விளையாடிய ராகுல் அரைசதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 46 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் ரோஹித்துடன் ஜோடி சேர்ந்த புஜாரா வழக்கம் போல் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
Also Read: சிட்னி சிக்சர்ஸில் மீண்டும் ஓராண்டு ஒப்பந்தமான பிராத்வைட்!
இதனால் மூன்றாம் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு108 ரன்களைச் சேர்த்து முன்னிலைப் பெற்றது. இந்திய அணி தரப்பில் ரோஹித் சர்மா 47 ரன்களுடனும், புஜாரா 14 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.