England vs Australia, 5th ODI, Dream11 Prediction: இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஆஸ்திரேலிய அணியானது தற்சமயம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் நான்கு ஒருநாள் போட்டிகளின் முடிவில் ஆஸ்திரேலிய அணி இரண்டிலும், இங்கிலாந்து அணி இரண்டு போட்டியிலும் வெற்றிபெற்று 2-2 என்ற கணக்கில் தொடரை சமன்செய்துள்ளன. 

Advertisement

இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரு அணிகளுக்கும் இடையேயான ஐந்தவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியானது பிரிஸ்டோலில் உள்ள கவுண்டி கிரிக்கெட் மைதானத்தில் நாளை நடைபெறவுள்ளது. இப்போட்டியில் வெற்றிபெறும் அணி தொடரை வெல்லும் என்பதால் இப்போட்டியில் வெற்றிபெறுவதற்காக இரு அணிகளும் கடுமையாக முயற்சிக்கும். இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று தொடரை கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.

Advertisement

ENG vs AUS 5th ODI: Match Details

  • மோதும் அணிகள் - இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா
  • இடம் - கவுண்டி கிரிக்கெட் மைதானம், பிரிஸ்டோல்
  • நேரம் - செப்டம்பர் 29, மாலை 5 மணி (இந்திய நேரப்படி)

ENG vs AUS 5th ODI: Live Streaming Details

இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இந்த ஒருநாள் தொடரை இந்திய ரசிகர்கள் சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் கண்டுகளிக்கலாம். அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் சோனி லிவ் ஓடிடி தளத்தியின் வாயிலாக இத்தொடரை நேரலையில் காண முடியும். 

ENG vs AUS: Head-to-Head In ODIs

  • மோதிய போட்டிகள் - 160
  • ஆஸ்திரேலியா - 90
  • இங்கிலாந்து - 65
  • முடிவில்லை - 05
Advertisement

ENG vs AUS: Ground Pitch Report

பிரிஸ்டோலில் உள்ள கவுண்டி கிரிக்கெட் மைதானத்தில் இப்போட்டியானது நடைபெறவுள்ளது. இதுவரை இங்கு மொத்தம் 37 சர்வதேச ஒருநாள் போட்டிகள் நடந்துள்ளன, அதில் 16 முறை முதலில் பேட்டிங் செய்த அணிகளும், 18 முறை இரண்டாவதாக பேட்டிங் செய்த அணிகளும் வெற்றி பெற்றுள்ளது. இங்கு முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர் 241 ரன்களாக ஊள்ளது. மேலும் இந்த மைதானத்தில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக 373 ரன்களாக உள்ளது. இதுதவிர இங்கு பேட்டர்கள் தங்கள் விருப்பம் போல் விளையாட முடியும் என்பதால், டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம்.

England vs Australia Possible Teams

Advertisement

இங்கிலாந்து: பில் சால்ட்,  பென் டக்கெட், வில் ஜாக்ஸ், ஹாரி புரூக் (கே), லியாம் லிவிங்ஸ்டோன், ஜேக்கப் பெத்தெல், ஜேமி ஸ்மித், பிரைடன் கார்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஆதில் ரஷித், மேத்யூ பாட்ஸ்

ஆஸ்திரேலியா: ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ் (கே), மார்னஸ் லாபுஷாக்னே, கிளென் மேக்ஸ்வெல், ஜோஷ் இங்கிலிஸ், அலெக்ஸ் கேரி, ஆரோன் ஹார்டி, மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஸாம்பா, ஜோஷ் ஹேசில்வுட்.

ENG vs AUS 5th ODI Dream11 Team

  • விக்கெட் கீப்பர்: அலெக்ஸ் கேரி
  • பேட்டர்ஸ்: டிராவிஸ் ஹெட் (கேப்டன்), பென் டக்கெட், ஹாரி புரூக், ஸ்டீவ் ஸ்மித்
  • ஆல்-ரவுண்டர்கள்: லியாம் லிவிங்ஸ்டோன் (துணை கேப்டன்), வில் ஜேக்ஸ், கிளென் மேக்ஸ்வெல், ஆரோன் ஹார்டி
  • பந்துவீச்சாளர்கள்: ஆடம் ஸாம்பா, ஆதில் ரஷித்
Advertisement

ENG vs AUS 5th ODI Dream11 Prediction, Today Match ENG vs AUS, ENG vs AUS Dream11 Team, Fantasy Cricket Tips, ENG vs AUS Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between England vs Australia

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News