ஜூன் 20 முதல் ஆகஸ்ட் 4 வரை இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது நடைபெற உள்ளது. இத்தொடருக்காக ஷுப்மன் கில் தலைமையிலானான 18 பேர் அடங்கிய இந்திய அணியையும் பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது.

Advertisement

முன்னதாக இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். இதனால் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சில வெற்றிடங்கள் உருவாகியுள்ளன. மேலும் இங்கிலாந்து தொடரில் அந்த இடங்களை நிரப்பக்கூடிய வீரர்கள் யார் என்ற கேள்விகளும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் பிளேயிங் லெவனில் இடம்பிடிக்க கூடிய மூன்று அறிமுக வீரர்கள் குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.

Advertisement

சாய் சுதர்ஷன்

இந்தப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளவர் இடது கை பேட்ஸ்மேன் சாய் சுதர்ஷன். கடந்த சில ஆண்டுகளாகவே அவர் உள்ளூர் மற்றும் சர்வதேச போட்டிகளில் தனது செயல்திறனால் கவனத்தை ஈர்த்து வருகிறார். இதுவரை 29 லிஸ்ட் ஏ போட்டிகளில் விளையாடியுள்ள சாய் சுதர்ஷன் 49 இன்னிங்ஸ்களில் 7 சதங்கள் மற்றும் 5 அரைசதங்களுடன் 1,957 ரன்கள் எடுத்துள்ளார். மேலும் அவர் இந்திய அணிக்காக மூன்று ஒருநாள் மற்றும் ஒரு டி20 போட்டியிலும் விளையாடிவுள்ளார். அதுமட்டுமின்றி நடந்து முடிந்த ஐபிஎல் தொடரிலும் அதிக ரன்களைக் குவித்த வீரருக்கான ஆரஞ்சு தொப்பியையும் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

அபிமன்யு ஈஸ்வரன்

இந்த பட்டியலில் அடுத்த இடத்தைப் பிடிப்பவர் அபிமன்யு ஈஸ்வரன். இவர் தற்போது இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா ஏ அணியின் கேப்டனாகவும் செயல்பட்டு வருகிறார். இதுவரை 102 முதல் தர போட்டிகளில் விளையாடிவுள்ள அபிமன்யு, 175 இன்னிங்ஸ்களில் 49 என்ற சராசரியுடன் 7,750 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 27 சதங்கள் மற்றும் 30 அரைசதங்களை அடித்துள்ளார். முன்னதாக பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடருக்கான இந்திய அணியிலும் அபிமன்யு இடம்பிடித்திருந்த நிலையில் அவருக்கு லெவனில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் இம்முறை ரோஹித் சர்மாவின் இடத்தை அபிமன்யு ஈஸ்வரன் உறுதிசெய்வாரா என்ற எதிர்பார்ப்புகள் உள்ளன. 

Advertisement

அர்ஷ்தீப் சிங்

இந்தப் பட்டியலில் இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங்கும் இடம்பிடித்துள்ளார். தற்போது 26 வயதாகும் அர்ஷ்தீப் சிங் தற்போது இந்திய அணியின் நம்பர்-1 டி20 பந்து வீச்சாளராக உள்ளார். அவர் டி20 கிரிக்கெட்டில் 63 போட்டிகளில் விளையாடி 99 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளர். இந்நிலையில் இந்திய டெஸ்ட் அணிக்கு முதல் முறையாக வாய்ப்பு பெற்றுள்ளர் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது ஆதிக்கத்தை செலுத்தவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: LIVE Cricket Score

Advertisement

மேகும் அவர் 21 முதல் தர போட்டிகளில் விளையாடி 37 இன்னிங்ஸ்களில் 66 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதுபோன்ற சூழ்நிலையில், இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகும் வாய்ப்பு அவருக்கு கிடைக்குமா இல்லையா என்பதைப் பார்ப்பது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங் மட்டுமே இடது கை வேகப்பந்து வீச்சாளர் என்பதால் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளன. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News