ENG vs IND, 4th Test: போட்டியில் இருந்து விலகிய ஆகாஷ் தீப்; உறுதிசெய்த ஷுப்மன் கில்!
ENG vs IND, 4th Test: இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இருந்து இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் விலகியுள்ளதாக அணியின் கேப்டன் ஷுப்மன் கில் உறுதிசெய்துள்ளர்.
மான்செஸ்டரில் உள்ள ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நாளை (ஜூலை 23) இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இத்தொடரில் இந்திய அணி ஏற்கெனவெ 2-1 என்ற கணக்கில் பின்தங்கியுள்ள நிலையில், இப்போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை சமன்செய்ய முடியும் என்ற கட்டாயத்துடன் எதிர்கொள்ளவுள்ளது. இதனால் இப்போட்டியில் இந்திய அணி மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
மேலும் இப்போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 8 ஆண்டுகளுக்கு பிறகு கம்பேக் கொடுத்திருக்கும் லியாம் டௌசனுக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மற்றபடி முந்தைய போட்டிகளில் விளையாடிய வீரர்கள் தங்கள் இடங்களைத் தக்கவைத்துள்ளனர். அதேசமயம் இப்போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் குறித்து எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை.
இப்போட்டிக்கு முன்னதாக இந்திய அணி வீரர் நிதிஷ் ரெட்டி காயம் காரணமாக தொடரிலிருந்தும், அர்ஷ்தீப் சிங் நான்காவது போட்டியில் இருந்தும் விலகியுள்ளனர். இந்நிலையில் தற்சமயம் அணியின் மெற்றொரு வேகப்பந்து வீச்சாளர் ஆகஷ் தீப்பும் காயம் காரணமாக நான்காவது டெஸ்டில் விளையாட மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இத்தகவலை அணியின் கேப்டன் ஷுப்மன் கில்லும் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், ஆகாஷ் தீப்புக்கு இடுப்பு வலி இருப்பதால் இந்தப் போட்டியில் அவர் விளையாட முடியாது. இதன் காரணமாக இப்போட்டியில் அன்ஷுல் காம்போஜ் அறிமுகமாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. நாங்கள் அன்ஷுலை போதுமான அளவு பார்த்திருக்கிறோம். அவர் கொண்டு வரும் திறமைகள்தான் எங்களுக்கு மிகவும் பிடிக்கும். அதனால் அவர் எங்களுக்கு போட்டியை வெல்லும் வாய்ப்பை ஏற்படுத்துவார் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று கூறியுள்ளார்.
ஹரியானாவைச் சேர்ந்த அன்ஷுல் கம்போஜ் இதுவரை 24 முதல் தர போட்டிகளில் விளையாடி பேட்டிங்கில் ஒரு அரைசதம் உள்பட 486 ரன்களையும், பந்துவீச்சில் 79 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். மேலும் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய கம்போஜ், 11 போட்டிகளில் விளையாடி 10 விக்கெட்டுகளை கைப்பற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Also Read: LIVE Cricket Score
இந்திய டெஸ்ட் அணி: ஷுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பந்த், யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், சாய் சுதர்சன், அபிமன்யு ஈஸ்வரன், கருண் நாயர், ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜூரல், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது. சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், குல்தீப் யாதவ், அன்ஷுல் கம்போஜ்