‘அடேய் யார்ரா நீ’ பீல்டிங், பேட்டிங்கைத் தொடர்ந்து பவுலிங்கிலும் களமிறங்கிய ஜார்வோ!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. அதிலும் கடைசி இரண்டு போட்டிகளே உள்ள நிலையில் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் இங்கிலாந்து தொடரில் இந்திய அணி விளையாடிய ஒவ்வொரு போட்டியிலும் ஏதேனும் சுவாரஸ்யங்கள் நிகழ்வது வழக்கமாகியுள்ளது. அந்த வகையில் இங்கிலாந்து ராசிகரான ஜார்வோ என்பவர், தற்போது நான்காவது டெஸ்டிலும் தனது சேட்டையை தொடங்கியுள்ளார்.
நான்காவது டெஸ்டின் இரண்டாம் நாள் ஆட்டம் நடந்துவரும் வேளையில், இந்திய அணி தரப்பில் உமேஷ் யாதவ் பந்துவீச தயாரானார். அப்போது மைதானத்தில் நுழைந்த ஜார்வோ திடீரென வேகமாக ஓடிவந்த பந்துவீசுவது போல் சைகை காட்டினார். இது மைதானத்திலிருந்த கேமிராவில் பதிவானது.
இதைகவணித்த மைதான பாதுகாப்பு ஊழியர்கள் மீண்டும் ஜார்வோவை குண்டுக்கட்டாக மைதானத்திலிருந்து வெளியேற்றினர். இக்காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
முன்னதாக ஜார்வோ, லார்ட்ஸ் டெஸ்டில் இந்திய அணியில் பீல்டிங் செய்வது போன்றும், லீட்ஸ் டெஸ்டில் விராட் கோலிக்கு முன்னதாக மட்டையைத்தூக்கி கொண்டு பேட்டிங் செய்யவும் முயற்சித்தார். அதற்காக யார்கஷையர் கவுண்டி கிளப் அவருக்கு ஹெட்டிங்லே மைதானத்தில் நுழைய வாழ்நாள் தடையும் விதித்தது.
Also Read: சிட்னி சிக்சர்ஸில் மீண்டும் ஓராண்டு ஒப்பந்தமான பிராத்வைட்!
இந்நிலையில் தற்போது ஜார்வோ மீண்டும் ஓவல் டெஸ்ட் போட்டியில் புகுந்து ரகளை செய்த சம்பவம் பெரும் பேசுபெருளாக மாறியுள்ளது.