ENG vs IND: சதங்களால் சாதனைப் படைத்த ஜோ ரூட்!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கும் இடையேயான 3ஆவது டெஸ்ட் போட்டி கடந்த 25ஆம் தேதி லீட்ஸ் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் விளையாடிய இந்திய அணி 78 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனாது. அதன்பிம் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை விளையாடி வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்து 423 ரன்களை குவித்து இந்திய அணியை விட 345 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.
இந்த போட்டியில் இங்கிலாந்து அணி சார்பாக அந்த அணியின் கேப்டன் ஜோ ரூட் சதமடித்ததுடன் 121 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இச்சதத்தின் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் யாரும் படைக்காத ஒரு சாதனையை முதல் ஆளாக படைத்து வரலாறு படைத்துள்ளார்.
அந்த சாதனையை யாதெனில் இந்த ஆண்டின் துவக்கத்தில் இலங்கை அணிக்கு எதிராக இரண்டு சதங்கள் அடித்த ஜோ ரூட் இந்தியாவுக்கு எதிரான சென்னை டெஸ்டில் சதம் அடித்து தொடர்ச்சியாக 3 சதங்கள் விளாசி இருந்தார் அதேபோன்று தற்போது இத்தொடரில் மூன்று போட்டிகளில் மூன்று சதங்களை தொடர்ச்சியாக விளையாடியுள்ளார்.
Also Read: : சிட்னி சிக்சர்ஸில் மீண்டும் ஓராண்டு ஒப்பந்தமான பிராத்வைட்!
இதன் மூலம் ஒரே ஆண்டில் இரு முறை தொடர்ச்சியாக மூன்று சதம் அடித்த முதல் டெஸ்ட் வீரர் என்ற சாதனையை ஜோ ரூட் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது