லார்ட்ஸ் டெஸ்ட்: இங்கிலாந்து பிளேயிங் லெவன் அறிவிப்பு; ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு இடம்!
ENG vs IND Test Series: இந்தியா அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணியின் பிளேயிக் லெவனில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகளைக் கொண்ட ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியும், இரண்டாவது போட்டியில் இந்திய அணியும் வெற்றியைப் பதிவுசெய்ததன் மூலம் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் தொடரை சமனிலையில் வைத்துள்ளன.
இந்நிலையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி நாளை (ஜூலை 10) லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் வெற்றி பெறும் அணி இந்த டெஸ்ட் தொடரில் முன்னிலைப் பெறும் என்பதால் இப்போட்டி மீதான ரசிகர்களுடைய எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் லார்ட்ஸ் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போட்டிக்கான இங்கிலாந்து அணியில் ஜோஷ் டங்கிற்கு பதிலாக நட்சத்திர வீரர் ஜோஃப்ரா ஆர்ச்சர் சேர்க்கப்பட்டுள்ளார். அதேசமயம் இப்போட்டிக்கான இங்கிலாந்து அணியில் ஷோயப் பஷீருக்கு பதில் கஸ் அட்கிசனும் இடம்பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இங்கிலாந்து பிளேயிங் லெவன்: பென் டக்கெட், ஜாக் கிரௌலி, ஒல்லி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ்(கேப்டன்), ஜேமி ஸ்மித், கிறிஸ் வோக்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், பிரைடன் கார்ஸ், ஷோயப் பசீர்.
Also Read: LIVE Cricket Score
இந்தியா உத்தேச லெவன்: கே.எல். ராகுல், யஷஸ்வி ஜெய்ஸ்வால், கருண் நாயர், ஷுப்மான் கில் (கேப்டன்), ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர்/ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, ஆகாஷ் தீப், முகமது சிராஜ்.