ENG vs IND, 2nd Test: இங்கிலாந்து அணி அறிவிப்பு; ஜோஃப்ரா ஆர்ச்சர் கம்பேக்!
England Test Squad: பர்மிங்ஹாமில் நடைபெறவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாலர் ஜோஃப்ரா ஆர்ச்சர் சேர்க்கப்பட்டுள்ளது அந்த அணியின் பந்துவீச்சு துறைக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.
ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் லீட்ஸில் நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் வகிக்கிறது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது போட்டி ஜூலை 2ஆம் தேதி பர்மிங்ஹாமில் நடைபெறவுள்ளது.
இதில் ஏற்கெனவே முதல் போட்டியில் வெற்றி பெற்று அசத்திய இங்கிலாந்து அணி தங்களின் வெற்றிப் பயணத்தை தொடர்வதுடன் தொடரை வெல்லும் முனைப்பிலும், மறுபக்கம் வெற்றிக்கு அருகில் இருந்து தோல்வியைத் தழுவிய இந்திய அணி இப்போட்டியில் கம்பேக் கொடுக்கும் முனைப்புடனும் இப்போட்டியை எதிர்கொள்கின்றன. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகின்றனர்.
இந்நிலையில் இப்போட்டிக்கான இங்கிலாந்து டெஸ்ட் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இந்த டெஸ்ட் அணியில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் இடம்பிடித்துள்ளார். முன்னதாக கடந்த 2021ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்காக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடிய அவர், அதன்பின் முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக கிட்டதிட்ட 4 ஆண்டுகளுக்கு மேல் டெஸ்ட் அணியில் சேர்க்கப்படாமல் இருந்தார்.
இதையடுத்து சமீபத்தில் காயத்தில் இருந்து முழுமையாக மீண்டுள்ள அவர் இங்கிலாந்து ஒருநாள், டி20 அணிகளில் இடம்பிடித்ததுடன் சிறப்பான ஆட்டத்தையும் வெளிப்படுத்தி இருந்தார். இதன் காரணமாக நான்கு ஆண்டுகளுக்கு பிறகு ஆர்ச்சர் மீண்டும் டெஸ்ட் அணிக்கு திரும்பியுள்ளார். இதனால் கிறிஸ் வோக்ஸுடன் தற்போது ஜோஃப்ரா ஆர்ச்சரும் இங்கிலாந்து அணியின் பந்துவீச்சு துறையை வழிநடத்தவுள்ளார். இதுதவிர்த்து அணியில் எந்த மாற்றமுல் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து டெஸ்ட் அணி: பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜோஃப்ரா ஆர்ச்சர், ஷோயப் பஷீர், ஜேக்கப் பெத்தேல், ஹாரி புரூக், பிரைடன் கார்ஸ், சாம் குக், ஜாக் கிரௌலி, பென் டக்கெட், ஜேமி ஓவர்டன், ஓலி போப், ஜோ ரூட், ஜேமி ஸ்மித், ஜோஷ் டோங், கிறிஸ் வோக்ஸ்.
Also Read: LIVE Cricket Score
இந்திய டெஸ்ட் அணி: ஷுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பந்த் (துணைக்கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், சாய் சுதர்ஷன், அபிமன்யு ஈஸ்வரன், கருண் நாயர், நிதிஷ் குமார் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜூரல், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ரானா.