கேரி சோபர்ஸ் சாதனையை சமன்செய்ய காத்திருக்கும் ரவீந்திர ஜாடேஜா!
India vs England 4th Test: இங்கிலாந்தில் 6வது இடத்தில் அல்லது அதற்குக் கீழே பேட்டிங் செய்து 1000 அல்லது அதற்கு மேல் டெஸ்ட் ரன்களை எடுத்த இரண்டாவது வெளிநாட்டு வீரர் என்ற சாதனையை படைக்கும் வாய்ப்பை ரவீந்திர ஜடெஜா பெற்றுள்ளார்.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஏற்கெனவே மூன்று போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், அதில் இங்கிலாந்து அணி இரண்டு போட்டிகளிலும், இந்திய அணி ஒரு போட்டியிலும் வெற்றியைப் பதிவுசெய்துள்ளன. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடைபெறவுள்ளது.
இப்போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றால் தொடரைக் கைப்பற்றும், இந்திய அணி வெற்றிபெற்றால் தொடரை சமன்செய்யும் என்பதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. மேலும் இப்போட்டிகாக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகியும் வருகின்றன. மேற்கொண்டு இப்போட்டிக்கான இரு அணியின் பிளேயிங் லெவனும் என்னவாக இருக்கும் என்ற கேள்விகள் அதிகரித்து வருகின்றன.
இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் மூலம் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா சிறப்பு சாதனையைப் படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். அதன்படி இப்போட்டியில் ஜடேஜா மேற்கொண்டு 58 ரன்களைச் சேர்க்கும் பட்சத்தில், இங்கிலாந்து 6அல்லது அதற்கு கீழ் பேட்டிங் செய்து 1000 ரன்களை கடந்த இரண்டாவது வீரர் எனும் பெருமையைப் பெறுவார். தற்சமயம் வெஸ்ட் இண்டீஸின் கேரி சோபர்ஸ் மட்டுமே இதனைச் செய்துள்ளார்.
கேரி சோபர்ஸ் இதுவரை 11 டெஸ்ட் போட்டிகளில் 16 இன்னிங்ஸ்களில் 84.38 சராசரியுடன் 1097 ரன்கள் எடுத்துள்ளார். இதில் அவர் 4 சதங்களையும், ஐந்து அரைசதங்களையும் பதிவுசெய்துள்ளார். அதேசமயம், ரவீந்திர ஜடேஜா இங்கிலாந்தில் இதுவரை 14 டெஸ்ட் போட்டிகளில் 27 இன்னிங்ஸ்களில் விளையாடி 40.95 சராசரியுடன் 942 ரன்கள் எடுத்துள்ளார். இதில் ஒரு சதம் மற்றும் 7 அரைசதங்களை அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: LIVE Cricket Score
நடப்பு டெஸ்ட் தொடரில் ரவீந்திர ஜடேஜாவின் செயல்திறன் சிறப்பாக உள்ளது, மேலும் இத்தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் அவர் ஐந்தாவது இடத்தில் உள்ளார். அதன்படி மூன்று டெஸ்ட் போட்டிகளில் ஆறு இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள ஜடேஜா 109 சராசரியுடன் 327 ரன்கள் எடுத்துள்ளார். இதில் அவர் தொடர்ச்சியாக நான்கு இன்னிங்ஸ்களில் அரைசதம் கடந்து அசத்தியதுடன், அவரது அதிகபட்ச ஸ்கோராக 89 ரன்களை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.