ENG vs IND : தொடரிலிருந்து விலகினார் ஸ்டூவர்ட் பிராட்!

Updated: Wed, Aug 11 2021 21:46 IST
Image Source: Google

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி டிரா ஆன நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது. 

இப்போட்டிக்காக இருநாட்டு கிரிக்கெட் வீரர்களும் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பயிற்சியின் போது இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் கால் பகுதியில் காயமடைந்தார். 

இதையடுத்து அவர் மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு, எம்.ஆர்.ஐ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை முடிவில் அவரது காயம் தீவிரமடைந்துள்ளதால், அவருக்கு ஓய்வு தேவை என்று தெரிவிக்கப்பட்டது. 

இதனால் இந்தியாவுடனான டெஸ்ட் தொடரிலிருந்து ஸ்டூவர்ட் பிராட் விலகியுள்ளார். இத்தொடரிலிருந்து அனுபவம் வாய்ந்த ஸ்டூவர் பிராட் விலகியுள்ளது இங்கிலாந்து அணிக்கு பெரும் பின்னடவை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.

முன்னதாக இங்கிலாந்து அணியில் அறிமுக வேகப்பந்துவீச்சாளர் சாகிப் மஹ்மூத் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சேர்க்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை