ENG vs NZ, 3rd Test : சதமடித்த மிட்செல்; 329 ரன்களில் நியூசிலாந்து ஆல் அவுட்!

Updated: Fri, Jun 24 2022 18:52 IST
Image Source: Google

இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது இங்கிலாந்து நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவடைந்த நிலையில் இரண்டு போட்டிகளிலும் அசத்தலான வெற்றியை பெற்ற இங்கிலாந்து அணியானது இந்த தொடரை ஏற்கனவே கைப்பற்றி விட்டது. 

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது போட்டி லீட்ஸில் தற்போது நடைபெற்று வருகிறது. அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணியில் டாம் லாதம் ரன் எதுவும் எடுக்காமலும், வில் யங் 20 ரன்களிலும், வில்லியம்சன் 31 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் டேவான் கான்வே 26 ரன்களிலும், ஹென்றி நிக்கோலஸ் 19 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்கள். 

இதனால் நியூசிலாந்து அணி தங்களது முதல் இன்னிங்சில் முதல் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 225 ரன்களை குவித்துள்ளது. அதனை தொடர்ந்து இன்று இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. 

இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டெரில் மிட்செல் - டாம் பிளெண்டல் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் பிளெண்டல் 55 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் அபாரமாக விளையாடிய டேரில் மிட்செல் சதம் விளாசி அசத்தினார். 

அதன்பின் அவரும் 109 ரன்களில் ஆட்டமிழக்கல் நியூசிலாந்து அணி இரண்டாம் நாள் உணவு இடைவேளை முடிந்தவுடன் 329 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து தரப்பில் ஜேக் லீச் 5 விக்கெட்டுகளையும், ஸ்டூவர்ட் பிராட் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை