இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி கார்டிஃப்பில் உள்ள சோபியா கார்டன் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்றது. 

Advertisement

இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பந்துவீச தீர்மானித்தார். அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணி எதிரணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுதடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 

Advertisement

இதனால் 35.1 ஓவர்களிலேயே பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 141 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணியில் அதிகபட்சமாக ஃபகர் ஸமான் 47 ரன்களை எடுத்தார். இங்கிலாந்து அணி தரப்பில் சோயிப் மஹ்மூத் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

இதையடுத்து 142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியில் பிலிப் சால்ட் 7 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். 

அதன்பின் ஜோடி சேர்ந்த டேவிட் மாலன் - ஸாக் கிரௌலி இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்து பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களை கதறவிட்டனர். இதில் இருவரும் அரைசதம் கடந்தும் அசத்தினர். 

இதன்மூலம் இங்கிலாந்து அணி 28 ஓவர்கள் மீதமிருந்த நிலையில் இலக்கை எட்டி, 9 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. 

Advertisement

இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டேவிட் மாலன் 68 ரன்களையும், ஸாக் கிரௌலி 58 ரன்களையும் சேர்த்திருந்தனர். இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News