Advertisement

England vs Pakistan Dream11 Prediction 1st T20I: ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானவது வரவுள்ள ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. மேலும் இத்தொடருக்காக அனைத்து அணிகளும் திவிரமாக தயாரகும் வகையில் மற்ற நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. அந்தவகையில் பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியானது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 

Advertisement

இவ்விரு அணிகளுக்கும் இடையே 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது நடைபெறவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டியானது லீட்ஸில் உள்ள ஹெடிங்க்லே கிரிக்கெட் மைதானத்தில் நாளை நடைபெறவுள்ளது. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருபெரும் வலிமை வாய்ந்த அணிகளாக கருதப்படும் இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் நேருக்கு நேர் மோதும் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அதேசமயம் இரு அணியிலும் நட்சத்திர வீரர்கள் இருப்பதால் நிச்சயம் இப்போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 

ENG vs PAK Match Details

  • மோதும் அணிகள் - இங்கிலாந்து vs பாகிஸ்தான்
  • இடம் - ஹெடிங்லே, லீட்ஸ்
  • நேரம் - இரவு 11 மணி (இந்திய நேரப்படி)

ENG vs PAK: Pitch Report

இங்கிலாந்தில் உள்ள கிரிக்கெட் மைதானங்கள் பொதுவாக வேகப்பந்துவீச்சு சாதகமானவை. இதில் நாளை நடைபெறும் ஹெடிங்லே மைதானமும் விதிவிலக்கல்ல. இதனால் வேகப்பந்து வீச்சாளர்கள் தங்களது ஆதிக்கத்தை செலுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் நிச்சயம் இங்கு பேட்டர்கள் பெரும் நெருக்கடியைச் சந்திப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வது வெற்றிக்கு வழி வகுக்கலாம்.

ENG vs PAK: Head-to-Head

  • மோதிய போட்டிகள் - 29
  • இங்கிலாந்து - 19
  • பாகிஸ்தான் - 01
  • முடிவில்லை - 01

ENG vs PAK: Live Streaming Details

இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இத்தொடரை இந்திய ரசிகர்கள் சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் கண்டுகளிக்கலாம். அதேசமயம் சோனி லிவ் ஓடிடி தளத்திலும் இத்தொடரானது நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. 

England vs Pakistan Predicted Teams

இங்கிலாந்து: ஜோஸ் பட்லர் (கே), பிலிப் சால்ட், ஜானி பேர்ஸ்டோவ், வில் ஜேக்ஸ், ஹாரி புரூக், மொயின் அலி, லியாம் லிவிங்ஸ்டோன், சாம் கரன், கிறிஸ் ஜோர்டான், மார்க் வூட், ஆதில் ரஷித்

Advertisement

பாகிஸ்தான்: முகமது ரிஸ்வான், சைம் அயூப், பாபர் ஆசாம்(கே), ஃபகார் ஸமான், இமாத் வாசிம், ஷதாப் கான், ஆசம் கான், ஹாரிஸ் ரவுஃப், நசீம் ஷா, ஷாஹீன் அஃப்ரிடி, முகமது அமீர்.

ENG vs PAK: Dream11 Team

  • விக்கெட் கீப்பர்கள்: பில் சால்ட் (கேப்டன்), முகமது ரிஸ்வான், ஜானி பேர்ஸ்டோவ்
  • பேட்டர்ஸ்: பாபர் ஆசாம், வில் ஜாக்ஸ் (துணை கேப்டன்), ஃபகார் ஸமான்
  • ஆல்ரவுண்டர்கள்: மொயின் அலி, சாம் கரன், இமாத் வாசிம்
  • பந்துவீச்சாளர்: ஷஹீன் அஃப்ரிடி, கிறிஸ் ஜோர்டான்

England vs Pakistan Fantasy Tips, ENG vs PAK: Dream11 Team, England vs Pakistan: Predicted XIs, ENG vs PAK: Pitch Report, ENG vs PAK: Live Streaming Details, ENG vs PAK: Head-to-Head, ENG vs PAK: Dream11 Prediction 1st T20I

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News