இங்கிலாந்து vs பாகிஸ்தான், இரண்டாவது டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

Updated: Fri, May 24 2024 17:30 IST
இங்கிலாந்து vs பாகிஸ்தான், இரண்டாவது டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்! (Image Source: Cricketnmore)

England vs Pakistan Dream11 Prediction 2nd T20I: பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியானது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டியானது நேற்று நடைபெற இருந்த நிலையில் ம்ழை காரணமாக டாஸ் வீசப்படாமலே ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது நாளை (மே 25) பர்மிங்ஹாமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருபெரும் வலிமை வாய்ந்த அணிகளாக கருதப்படும் இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் நேருக்கு நேர் மோதும் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

ENG vs PAK Match Details

  • மோதும் அணிகள் - இங்கிலாந்து vs பாகிஸ்தான்
  • இடம் - எட்ஜ்பாஸ்டன், பர்மிங்ஹாம்
  • நேரம் - இரவு 7 மணி (இந்திய நேரப்படி)

ENG vs PAK: Pitch Report

இங்கிலாந்தில் உள்ள கிரிக்கெட் மைதானங்கள் பொதுவாக வேகப்பந்துவீச்சு சாதகமானவை. இதில் இப்போட்டி நடைபெறும் எட்ஜ்பாஸ்டன் கிரிக்கெட் மைதானமும் விதிவிலக்கல்ல. இதனால் வேகப்பந்து வீச்சாளர்கள் தங்களது ஆதிக்கத்தை செலுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இங்கு கூடுதல் பவுன்ஸ் இருக்கும் என்பதால் நிச்சயம் பேட்டர்கள் தங்கள் ஷாட்டுகளை விளையாடமுடியும்.  இதனால் டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வது வெற்றிக்கு வழி வகுக்கலாம்.

ENG vs PAK: Head-to-Head

  • மோதிய போட்டிகள் - 30
  • இங்கிலாந்து - 19
  • பாகிஸ்தான் - 09
  • முடிவில்லை - 02

ENG vs PAK: Live Streaming Details

இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இத்தொடரை இந்திய ரசிகர்கள் சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் கண்டுகளிக்கலாம். அதேசமயம் சோனி லிவ் ஓடிடி தளத்திலும் இத்தொடரானது நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. 

England vs Pakistan Predicted Teams

இங்கிலாந்து: ஜோஸ் பட்லர் (கே), பிலிப் சால்ட், ஜானி பேர்ஸ்டோவ், வில் ஜேக்ஸ், ஹாரி புரூக், மொயின் அலி, லியாம் லிவிங்ஸ்டோன், சாம் கரன், கிறிஸ் ஜோர்டான், மார்க் வூட், ஆதில் ரஷித்

பாகிஸ்தான்: முகமது ரிஸ்வான், சைம் அயூப், பாபர் ஆசாம்(கே), ஃபகார் ஸமான், இமாத் வாசிம், ஷதாப் கான், ஆசம் கான், ஹாரிஸ் ரவுஃப், நசீம் ஷா, ஷாஹீன் அஃப்ரிடி, முகமது அமீர்.

ENG vs PAK: Dream11 Team

  • விக்கெட் கீப்பர்கள்: பில் சால்ட் (கேப்டன்), முகமது ரிஸ்வான், ஜானி பேர்ஸ்டோவ்
  • பேட்டர்ஸ்: பாபர் ஆசாம், வில் ஜாக்ஸ் (துணை கேப்டன்), ஃபகார் ஸமான்
  • ஆல்ரவுண்டர்கள்: மொயின் அலி, சாம் கரன், இமாத் வாசிம்
  • பந்துவீச்சாளர்: ஷஹீன் அஃப்ரிடி, கிறிஸ் ஜோர்டான்

England vs Pakistan Fantasy Tips, ENG vs PAK: Dream11 Team, England vs Pakistan: Predicted XIs, ENG vs PAK: Pitch Report, ENG vs PAK: Live Streaming Details, ENG vs PAK: Head-to-Head, ENG vs PAK: Dream11 Prediction 2nd T20I

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை