England vs Pakistan Dream11 Prediction 4th T20I: பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியானது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், இரண்டாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றது. இதையடுத்து நேற்று நடைபெற இருந்த மூன்றாவது டி20 போட்டியும் மழை காரணமாக முழுவதுமாக கைவிடப்பட்டது. இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது மற்றும் கடைசி டி20 போட்டியானது நாளை (மே 30) லண்டனில் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஏற்கெனவே இங்கிலாந்து அணி இத்தொடரில் நடைபெற்ற ஒரு போட்டியில் வெற்றிபெற்றுள்ள நிலையில், இப்போட்டியிலும் வெற்றிபெற்று தொடரைக் கைப்பற்றும் முயற்சியில் விளையாடவுள்ளது.

Advertisement

ENG vs PAK Match Details

  • மோதும் அணிகள் - இங்கிலாந்து vs பாகிஸ்தான்
  • இடம் - கென்னிங்டன் ஓவல், லண்டன்
  • நேரம் - இரவு 11 மணி (இந்திய நேரப்படி)
Advertisement

ENG vs PAK: Pitch Report

லண்டனில் உள்ள கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் இதுவரை 15 டி20 போட்டிகள் நடைபெற்றது. இதில் 9 முறை முதலில் பேட்டிங் செய்த அணியே வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ஆனால் இந்த மைதானத்தின் முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோரானது 161 ரன்களாக மட்டுமே உள்ளது. மேலும் இங்குள்ள மேற்பரப்பானது புற்கள் நிறைந்துள்ள காரணத்தால் இங்கு வேகப்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இங்கு டாஸ் வெல்லும் அணியானது முதலில் பேட்டிங் செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம். 

ENG vs PAK: Head-to-Head

  • மோதிய போட்டிகள் - 32
  • இங்கிலாந்து - 20
  • பாகிஸ்தான் - 09
  • முடிவில்லை - 03

ENG vs PAK: Live Streaming Details

Advertisement

இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இத்தொடரை இந்திய ரசிகர்கள் சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் கண்டுகளிக்கலாம். அதேசமயம் சோனி லிவ் ஓடிடி தளத்திலும் இத்தொடரானது நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. 

England vs Pakistan Predicted Teams

இங்கிலாந்து: பிலிப் சால்ட், வில் ஜாக்ஸ், ஜானி பேர்ஸ்டோவ், ஹாரி புரூக், லியாம் லிவிங்ஸ்டோன், மொயீன் அலி(கே), கிறிஸ் ஜோர்டான், ஜோஃப்ரா ஆர்ச்சர், அடில் ரஷித், ரீஸ் டாப்லி, மார்க் வுட்

Advertisement

பாகிஸ்தான்: சைம் அயூப், பாபர் அசாம்(கே), முகமது ரிஸ்வான், ஃபகார் ஜமான், அசம் கான், இஃப்திகார் அகமது, ஷதாப் கான், இமாத் வாசிம், முகமது அமீர், ஷாஹீன் அஃப்ரிடி, ஹாரிஸ் ரவுஃப்

ENG vs PAK: Dream11 Team

  • விக்கெட் கீப்பர்கள்: பில் சால்ட் (கேப்டன்), முகமது ரிஸ்வான்
  • பேட்டர்ஸ்: ஜானி பேர்ஸ்டோவ், பாபர் ஆசாம், வில் ஜாக்ஸ் (துணை கேப்டன்), ஃபகார் ஸமான்
  • ஆல்ரவுண்டர்கள்: மொயின் அலி, இமாத் வாசிம்
  • பந்துவீச்சாளர்: ஷஹீன் அஃப்ரிடி, ஜோஃப்ரா ஆர்ச்சர், கிறிஸ் ஜோர்டான்

England vs Pakistan Fantasy Tips, ENG vs PAK: Dream11 Team, England vs Pakistan: Predicted XIs, ENG vs PAK: Pitch Report, ENG vs PAK: Live Streaming Details, ENG vs PAK: Head-to-Head, ENG vs PAK: Dream11 Prediction 4th T20I

Advertisement

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News