ENG vs SL, 1st ODI: ஜோ ரூட், வோக்ஸ் அசத்தல்; இலங்கையை பந்தாடியது இங்கிலாந்து!
இங்கிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய இலங்கை அணிக்கு கேப்டன் குசால் பெரேரா, வானிந்து ஹசரங்கா ஆகியோர் அரைசதமடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். ஆனால் அவர்களைத் தவிர மற்ற வீரர்கள் யாரும் சோபிக்க வில்லை.
இதனால் 42.3 ஓவர்களிலேயே இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் 185 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதில் அதிகபட்சமாக குசால் பெரேரா 73 ரன்களையும், வானிந்து ஹசரங்கா 54 ரன்களையும் எடுத்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் கிறிஸ் வோக்ஸ் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையடுத்து எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு தொடக்கமே ஏமாற்றமளிக்கும் வகையில் லிவிங்ஸ்டோன் 5 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
அவரைத் தொடர்ந்து ஜோடி சேர்ந்த ஜானி பேர்ஸ்டோவ் - ஜோ ரூட் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தியது.
இதில் பேர்ஸ்டோவ் 43 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையிலிருந்த ஜோ ரூட் அரைசதமடித்து அசத்தினார். இதன்மூலம் இங்கிலாந்து அணி 34.5 ஓவர்களிலேயே இலக்கை எட்டி, 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜோ ரூட் 79 ரன்களைச் சேர்த்தார். இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது.