இங்கிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி நேற்று கார்டிஃபில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய இலங்கை அணியில் கேப்டன் குசால் பெரேரா, ஷனகா ஆகியோரைத் தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து ஏமற்றமளித்தனர். 

Advertisement

இதனால் 20 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 7 விக்கெட் இழப்புக்கு 129 ரன்களை மட்டுமே எடுத்தது. இதில் அதிகபட்சமாக ஷனகா 50 ரன்களையும், குசால்பெரேரா 30 ரன்களையும் சேர்த்தனர். 

அதன்பின் எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு ஜேசன் ராய் - ஜோஸ் பட்லர் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தது. பின் 36 ரன்கள் எடுத்திருந்த ஜேசன் ராய், சமீரா பந்துவீச்சில் ஆட்டமிழக்க, மறுமுனையில் அதிரடியாக விளையாடிய ஜோஸ் பட்லர் அரைசதம் கடந்தார். 

இதன்மூலம் இங்கிலாந்து அணி 17.1 ஓவர்களிலேயே இலக்கை எட்டி 8 விகெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது. மேலும் இப்போட்டியில் அதிரடியாக விளையாடி 68 ரன்களை குவித்த ஜோஸ் பட்லர் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News